ஜீ தமிழ் சீரியல் நடிகரை கரம்பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை - குவியும் வாழ்த்துக்கள்

ஜீ தமிழ் சீரியல் நடிகரை கரம்பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை

By subhashini · 18/6/2026

சின்னத்திரை சீரியல் ஜோடிகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது சமீப காலமாகவே தொடர்கதையாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சீரியலில் தன்னுடன் நடித்த ரீல் ஜோடிகளையே ரியலாக கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அதோடு வேறு வேறு சீரியல் நடித்துக் கொண்ட ஜோடிகளுமே காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த மாதிரி நிறைய சம்பவங்கள் சமீப காலமாக சின்ன திரையில் நடந்து கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் சேத்தன் - திவ்யதர்ஷினி, சித்து- ஸ்ரேயா, மதன்- ரேஷ்மா, ஷபானா- ஆரியன் என்று பல ஜோடிகளின் பெயர்களை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு காதல் ஜோடி இணைந்து இருக்கிறார்கள். ஜீ தமிழ் சீரியலில் நடித்தது வரும் நடிகரும், விஜய் டிவியில் நடிக்கும் நடிகையும் தான் தற்போது காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். இது தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகவே சென்று கொண்டிருக்கின்றது.

ஆனந்த் செல்வன்-ஷியாமந்தா கிரண் காதல்:

அவர்கள் வேறு யாரும் இல்லை, ஆனந்த் செல்வன்-ஷியாமந்தா கிரண். ஜீ தமிழில் சூப்பராக ஒளிபரப்பாகி வரும் அயலி சீரியலில் ஹீரோவாக கலக்கி கொண்டிருப்பவர் ஆனந்த் செல்வன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வருபவர் ஷியாமந்தா கிரண். தற்போது ஷியாமந்தா கிரண், ஒண்ணா இருக்க கத்துக்கணும் என்ற புது சீரியலில் நடிக்கிறார். சீக்கிரமாகவே இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஆனந்த் செல்வன்-ஷியாமந்தா கிரண் திருமணம்:

மேலும், இவர்கள் இருவரும் தான் காதலித்து வந்திருக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே விஜய் டிவியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஆயுத எழுத்து என்ற சீரியலில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த சீரியலில் நடித்த போதுதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து இருக்கிறது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள். தற்போது இவர்களுடைய காதல் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறது. இவர்களுடைய திருமணம் என்று கோவையில் நடைபெற்றிருக்கிறது.

குவியும் வாழ்த்துக்கள்:

இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், பவித்ரா, ரித்திகா, சரண்யா உட்பட ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஷியாமந்தா கிரண் கிரனுக்கு இப்போது 38 வயது. ஆனால், இவருடைய கணவர் ஆனந்த் செல்வனுக்கு 31 தான். ஆனந்த் செல்வனை விட ஏழு வயது மூத்தவர் ஷியாமந்தா கிரண் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full