என்னையும் அவர்களுக்கு ஆதரவாகப் பேச சொன்னாங்க, ஆனால் - சீரியல் நடிகர் அருண் ஓபன் டாக்

By subhashini · 3/9/2025

தெருநாய் சர்ச்சை தொடர்பாக நடிகர் அருண் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்கே தெருநாய் விவகாரம் தான். தெரு நாய்களின் மூலம் முதியவர்கள், குழந்தைகள் என பல பேர் கடிபட்டு பாதிக்கப்பட்டு இருப்பதால் தான் இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்து இருக்கிறது. பிரபலங்கள் சிலர் தெரு நாய்களுக்கு ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட் தாமாகவே முன்வந்து சில நடவடிக்கைகளை எடுத்தது.

இந்திய முழுக்க உள்ள சில விலங்கு நல ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். தற்போது நாடு எங்கும் இந்த தெருநாய் சர்ச்சை தான் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இது தொடர்பாக கூட நீயா நானா நிகழ்ச்சியில் விவாதம் நடத்தி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசிய சிலருக்கு எதிராக சோசியல் மீடியாவில் கண்டனங்கள் எழுந்து இருக்கிறது. அதோடு நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள். இதனால் படவா கோபி, நடிகை அம்மு உட்பட சிலர் தாங்கள் பேசியதை முழுதாக ஒளிபரப்பவில்லை என்றெல்லாம் பேசி வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்கள்.

தெருநாய் சர்ச்சை:

இந்நிலையில் இது தொடர்பாக சீரியல் நடிகர் அருண் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர்,
நான் இப்போது விஜய்யின் ஜனநாயகன் படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன். இதனால்தான் பொது விஷயத்தில் எதுவும் கருத்து சொல்ல வேண்டாம் என்று கொஞ்ச நாளாகவே பேசாமல் இருந்தேன். ஆனால், இந்த தெரு நாய் விவகாரம் என்னை திரும்பவும் பேச வைத்து விட்டது. அதுபோக, என் சக நடிகர்கள் விஜய் டிவி நிகழ்ச்சியில் பேசின பேச்சு என்னையே கடுப்பாகி இருக்கிறது. பொதுமக்கள் நிச்சயம் கோபப்படத்தான் செய்வார்கள். ஒரு மனுஷன் நாய் பிரச்சனையால் தன் குழந்தையை இழந்துட்டு அழுது கொண்டிருக்கிறார்.

அருண் வீடியோ:

அந்த இடத்தில் போய் எப்படி பேசணும் தெரிஞ்சு பேச வேண்டாமா? நானும் தான் வீட்டில் நாய் வளர்க்கிறேன். அதுக்காக கண்ணை மூடிட்டு பேச முடியுமா? எதுக்குமே ஒரு எல்லை இருக்கு. நிகழ்ச்சியில் பேசி முடித்துவிட்டு எடிட் பண்ணி டிவியில் போட்டு விட்டார்கள் என்று புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை. டிவியில் இருப்பவர்களில் நான் மட்டுமில்லை நிறைய பேர் நாய் வளர்க்கிறோம். நாய்க்கு ஒன்று என்றால் திரண்டு போராட ஒரு குரூப்பே இருக்கிறது. அவர்களில் முக்கால்வாசி பேர் இந்த தெரு நாய் கடி விவகாரத்தில் எதையும் யோசிக்காமல் கண்மூடித்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by Arun Rajan (@actorarunrajan)

நிகழ்ச்சியில் பற்றி சொன்னது:

அந்த நிகழ்ச்சிக்கு என்னையும் கூப்பிட்டார்கள். தீவிரமான நாய் லவ்வர்ஸ் சிலர் எதையோ சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டதா கேள்விப்பட்டேன். நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இப்ப மக்கள் கொந்தளிக்கவும் பேசினவங்களுக்கு வேற வழி தெரியல. எதையாவது சொல்லி சமாளித்து கொண்டிருக்கிறார்கள். இப்ப கடைசியில் என்னையும் அவர்களுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட கேட்டார்கள். அதற்கு பிறகு தான் எதார்த்தத்தை பேசணும் என்று நினைத்தேன். ரேபிஸ் பிரச்சனை தீவிரமாக போய்க்கொண்டிருந்த சமயத்தில் நான் நாய் தான் முக்கியம் என்று பேசிட்டு இருந்தால் சமூகம் என்னை மன்னிக்காதுங்க என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full