தன்னுடைய நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த வானத்தை போல சீரியல் நடிகர்

By subhashini · 21/1/2025

வானத்தை போல சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்திக் மனைவிக்கு வளைகாப்பு நடந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் வானத்தைப்போல. இந்த தொடர் அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை.

சீரியலில் அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக துளசி இருந்தார். தொடர்ந்து பல நடிகர்கள் விலகி இருந்தாலும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. தன் தங்கைக்காக எதுவும் செய்யும் அண்ணனாக சின்ராசு இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த சீரியல் முடிந்தது. மேலும், இந்த சீரியலில் ராஜபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் அஸ்வின் கார்த்திக்.

அஸ்வின் கார்த்திக் பற்றிய தகவல்:

இந்த சீரியலின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதற்குப்பின் இவர் திரைப்பட வாய்ப்புகள் தேடி அலைந்திருந்தார். அப்போது தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர்ஹிட் கொடுத்த சரவணன் மீனாட்சி தொடரில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அஸ்வின் நடித்த சீரியல்கள்:

இவருடைய கதாபாத்திரம் பெரிதாக யாருக்குமே தெரியாது என்று சொல்லலாம். இதை தொடர்ந்து இவர் சன் டிவி, விஜய் டிவியில் ஒளிபரப்பான குலதெய்வம், அரண்மனைக்கிளி, மனசு போன்ற பல சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். அதற்குப்பின் இவர் சீரியல்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் பிரபலமாக்கியது வானத்தைப்போல சீரியலின் மூலம் தான்.

கார்த்திக் திருமணம்:

தற்போது இவர் சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான அன்னம் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் ஒளிபரப்பான கொஞ்ச நாட்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகுத்து வருகிறது. இதற்கிடையில் கடந்த ஆண்டு நடிகர் அஸ்வின் கார்த்திக் அவர்கள் காயத்ரி ஞானசேகரனை காதலிப்பதாக அறிவித்து இருந்தார். இவர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது.

https://www.youtube.com/shorts/udF2FMhbaVU?app=desktop

கார்த்திக் மனைவி வளைகாப்பு:

அதன் பின் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்களின் திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து சொல்லி இருந்தார்கள். இதை அடுத்து கடந்த ஆண்டு நடிகர் கார்த்திக், தன்னுடைய மனைவி காயத்ரி கர்ப்பமாக சொல்லி இருந்தார். இந்த நிலையில் நடிகர் அஸ்வின் கார்த்திக் அவர்கள் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவி காயத்ரிக்கு வளைகாப்பு நடத்தி இருக்கிறார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full