முதல் நாள் ராத்திரி விருது, காலையில் மகள் - ரெட்டிப்பு சந்தோஷத்தில் அஸ்வின் கார்த்திக் சொன்னது
குழந்தை பிறந்த பிறகு சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்தி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் வானத்தைப்போல. இந்த தொடர் அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த சீரியலில் ராஜபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் அஸ்வின் கார்த்தி. இந்த சீரியலின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
அதற்குப்பின் இவர் திரைப்பட வாய்ப்புகள் தேடி அலைந்திருந்தார். அப்போது தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த சரவணன் மீனாட்சி தொடரில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் பெரிதாக யாருக்குமே தெரியாது என்று சொல்லலாம். இதை தொடர்ந்து இவர் சன் டிவி, விஜய் டிவியில் ஒளிபரப்பான குலதெய்வம், அரண்மனைக்கிளி, மனசு போன்ற பல சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
அஸ்வின் கார்த்திக் பற்றிய தகவல்:
இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் பிரபலமாக்கியது வானத்தைப்போல சீரியலின் மூலம் தான். தற்போது இவர் சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான அன்னம் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான கொஞ்ச நாட்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகுத்து வருகிறது. இதற்கிடையில் கடந்த ஆண்டு நடிகர் அஸ்வின் கார்த்தி அவர்கள் காயத்ரி ஞானசேகரனை காதலிப்பதாக அறிவித்து இருந்தார். இவர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார்.
அஸ்வின் கார்த்தி குழந்தை:
இவர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. அதன் பின் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்களின் திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து சொல்லி இருந்தார்கள். இதை அடுத்து கடந்த ஆண்டு நடிகர் கார்த்திக், தன்னுடைய மனைவி காயத்ரி கர்ப்பமாக சொல்லி இருந்தார். இதை அடுத்து அஸ்வின் கார்த்திக் - காயத்ரி ஜோடிக்கு கடந்த வாரம் தான் அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதை பார்த்து பலருமே அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
அஸ்வின் கார்த்தி பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் குழந்தை பிறந்ததை ஒட்டி நடிகர் அஸ்வின் கார்த்தி அளித்த பேட்டியில், எனக்கு பெண் குழந்தை வேணும் என்று தான் ஆசையாக இருந்தது. இது எல்லா அப்பாக்களுக்கும் இருக்கிற பொதுவான ஆசை தான். ஆனால், என்னுடைய மனைவியும் என்னை மாதிரியே பெண் குழந்தை வேண்டும் என்று தான் ஆசைப்பட்டார். எதிர்பார்த்த மாதிரியே எங்களுக்கு மகள் பிறந்து விட்டாள். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இப்போதெல்லாம் சிசேரியன் ரொம்பவே சகஜம் ஆகிவிட்டது.
மகள் பிறந்தது-விருது பற்றி சொன்னது:
என் மனைவிக்கு நார்மல் டெலிவரியில் தான் குழந்தை பிறந்தது. என் மகள் பிறந்த சந்தோஷத்தில் எனக்கு விருது கிடைத்ததை மறந்து விட்டேன். சன் டிவியில் அன்னம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தொடங்கின சில நாட்களிலேயே மக்களிடம் இருந்து எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு குடும்ப விருதுகளில் எனக்கும் விருது கிடைத்திருக்கிறது. இதில் என்ன ஹைலைட் என்றால், முதல் நாள் இரவில் எனக்கு விருது அறிவித்தார்கள். மறுநாள் மகள் பிறந்து விட்டாள். யாருக்கும் இப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைக்குமா? என்று உற்சாகத்துடன் கூறி இருக்கிறார்.