விஜய் டிவி சீரியல் நடிகர் அவினாஷிற்கு குழந்தை பிறந்தாச்சு - போட்டோவுடன் அவரே போட்ட பதிவு

By subhashini · 18/6/2025

சீரியல் நடிகர் அவினாஷிற்கு குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அவினாஷ். இவர் கேரளாவை சேர்ந்தவர். ஆனால், தன்னுடைய நான்கு வயதிலேயே இவர் குடும்பத்துடன் சென்னைக்கு வந்து விட்டார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் ஸ்போர்ட்ஸ் பிளேயரும் ஆவார். நேஷனல் லெவலில் அத்தலடிக்சில் அவினாஷ் பல பதக்கங்களை பெற்றிருக்கிறார். இருந்தாலும், இவருக்கு நடிப்பின் மீது தான் அதிக ஆர்வம்.

தன்னுடைய சிறு வயதில் இருந்து இவர் பல நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். நான்காம் வகுப்பு படிக்கும் போதே சன் டிவியில் ஒளிபரப்பான ‘தில்லானா தில்லானா’என்ற நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்றிருந்தார். ஆனால், வீட்டில் படிப்பு தான் முக்கியம் என்று சொன்ன பிறகு இவர் 12 ஆம் வகுப்பு வரை படிப்பை முடித்துவிட்டு, தன்னுடைய டான்ஸ் கேரியரை மீண்டும் தொடங்கியிருந்தார். இவர் சன் டிவியில் ‘அழகு’ சீரியலில் திருநாவுக்கரசு என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

அவினாஷ் குறித்த தகவல்:

பின் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி முடிவடைந்த அம்மன் சீரியலிலும் நடித்திருந்தார். அதற்குப் பிறகு சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ சீரியலில் கயலின் தம்பியாக சில காலம் நடித்து இருந்தார். ஆனால், திடீரென அந்த சீரியலில் இருந்து இவர் விலகி விட்டார். இவர் தமிழ் சீரியல்கள் மட்டுமில்லாமல் மலையாள சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர், ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை தன்னுடைய நடனத்தால் ஈர்த்தார்.

அவினாஷ் கேரியர் :

இறுதிக்கட்டம் வரை வந்த பின் இவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் நிகழ்ச்சியில் தொடர முடியாது நிலை ஏற்பட்டது. அந்த நிலையிலும் தன்னால் முடியும் என்று மன தைரியத்துடன் போராடி அவினாஷ் நடனமாடி டைட்டில் வின்னர் பட்டத்தையும் பெற்றிருந்தார். பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்னும் சீரியலில் நடித்து இருந்தார். அதேபோல் அவினாஷின் தங்கை அக்ஷிதாவும் சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வருகிறார் அக்ஷிதா.

அவினாஷ் திருமணம்:

இதற்கிடையில் நடிகர் அவினாஷ் தனது நீண்ட நாள் காதலியான தெரசாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் ஆக இருந்தாலும் இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் சிறப்பாக நடைபெற்றது. அதற்கு பின் சில மாதங்களுக்கு முன் அவினாஷ் தான் தந்தையாக போகும் செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். அதோடு தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். இவரின் பதிவை பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவினாஷ் ஜோடிக்கு வாழ்த்துக்களை குவித்து இருந்தார்கள்.

https://www.youtube.com/shorts/4n3AqaqYFo0

அவினாஷ் குழந்தை:

இதை அடுத்து சமீபத்தில் நடிகர் அவினாஷ் தன்னுடைய மனைவிக்கு வளைகாப்பு செய்திருந்தார். இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் அவினாஷிற்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அவினாஷ்-தெரசா தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த செய்தியை புகைப்படத்துடன் சோசியல் மீடியாவில் அவினாஷ் பதிவிட்டு இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full