சீரியல் நடிகர் தேவ் ஆனந்தின் 23 வயது மகனை பார்த்துள்ளீர்களா ? இவருக்கு இவ்ளோ பெரிய மகனா

By Arun · 13/4/2023

எங்களுக்கு குழந்தையே இல்லை என்று மனவேதனையுடன் சின்னத்திரை சீரியல் நடிகர் தேவ் ஆனந்த் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 90களில் இருந்து சின்னத்திரை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் தேவ் ஆனந்த். இவர் சின்னத்திரை சீரியல்களில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரை படங்களிலும் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் என பல ரோலில் தேவ் ஆனந்த் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் சன் டிவியில் முடிவடைந்த ரோஜா சீரியலில் இவர் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இதனை அடுத்து தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் என்ற தொடரில் நடித்து வருகிறார். இப்படி 25 வருடங்களுக்கு மேலாக இவர் சின்னத்திரையில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் தேவ் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

அதில் அவர் தன்னுடைய திரை பயணம், குடும்ப வாழ்கை குறித்து கூறியிருந்தது, நான் நார்த் இந்தியனாக இருந்தாலும் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். எங்கள் குடும்பத்தில் யாருமே மீடியாவை சேர்ந்தவர்கள் இல்லை. என்னுடைய அப்பாவுக்கு சினிமாவில் பலரை தெரியும். அதோடு என்னுடைய அப்பாவிற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா, கலைஞர் என்று பெரிய தலைவர்களை எல்லாம் நன்றாக தெரியும். அதனால் சினிமாவில் முயற்சி செய்யலாம் என்று தான் இந்த துறையை தேர்வு செய்தேன்.

பல வருடமாக நான் இந்த துறையில் இருக்கிறேன். அதேபோல் நான் இந்த மீடியா வாழ்க்கையில் பல வேதனைகளை அனுபவித்து இருக்கிறேன். ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு அதிகமாக கோபம் வந்தது. அதனால என்னுடைய வாழ்க்கையில் நான் பலவற்றை இழந்து இருக்கிறேன். இப்போது நடப்பதை எல்லாம் பார்க்கும்போது இவ்வளவுதானா? என்று ஏற்றுக்கொள்ள தோன்றுகிறது. ஆனால், முன்பெல்லாம் எனக்கு அந்த எண்ணம் வராது. இப்போ மீடியாவிற்குள் வரும் நடிகர்கள் பலரும் யாரையும் மதிப்பதில்லை. அது ரொம்ப வேதனை அளிக்கிறது.

மேலும், இப்ப வருகிற சில பேர், நீங்கள் எல்லாம் ஒரு ஆளா என்கிற மாதிரி நடந்து கொள்கிறார்கள். அதை பார்க்கும்போது பயங்கரமாக கோபம் வருகிறது. இடையில் சில மாதங்களாக எனக்கு வாய்ப்பு இல்லாமல் வாய்ப்புக்காக தேடி அலைந்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தான் தாடி எல்லாம் வளர்ந்து ஒரு மாதிரியாக இருந்தேன். பின் சித்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. அந்த சீரியலில் எனக்கு ஒரு டாக்டர் ரோல் கிடைத்தது.

குழந்தை குறித்து சொன்னது:

அது ஒரு சோம்பேறி டாக்டர். வீட்டில் உட்கார்ந்து கொண்டே இருப்பவர் போன்ற கதாபாத்திரம். எனக்கு ஏற்கனவே சும்மாவே சாப்பிட பிடிக்கும் என்பதால் இந்த கேரக்டரை சொல்லி நான் நன்றாகவே சாப்பிட்டு கொண்டிருந்தேன். அதை என்னால் மறக்கவே முடியாது. தேவ் ஆனந்த்திற்கு 2000ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார். இப்படி ஒரு நிலையில் தேவ் ஆனந்த்தின் மகனின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full