நடிப்பை விட்டு சொந்த ஊருக்கு போயிட்டேனா? - சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த 'கனா காணும் காலங்கள்' இர்ஃபான்

By subhashini · 19/3/2025

கனா காணும் காலங்கள் நடிகர் இர்பானின் தற்போதைய நிலை பற்றிய தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 90ஸ் குழந்தைகளின் பேவரைட் சீரியல் கனா காணும் காலங்கள். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்தவர் இர்பான். இதனை தொடர்ந்து இர்பான் ‘சரவணன் மீனாட்சி ‘ தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பிறகு இர்பான் அவர்கள் சீரியலை விட்டு சினிமாவுக்கு வந்து விட்டார். இவர் பட்டாளம், எதிர் வீடு, ரூ, பொங்கி எழு மனோகரா போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.

இதில் எந்த படமும் அவருக்கு பெரியதாக அமையவில்லை. கடைசியாக இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரும், நடிகருமான சேரன் இயக்கத்தில் வெளிவந்த “ராஜாவுக்கு செக்” படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். இந்த படத்தை சேரன் அவர்கள் இயக்கி நடித்து இருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. மேலும், இர்பானுக்கு சரியாக பட வாய்ப்புகள் வரவில்லை. அதன் பின் இவர் விஜய் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ வெப்சீரிஸ்ஸில் நடித்து இருந்தார்.

இர்பான் குறித்த தகவல்:

ஒன்பது ஆண்டுகள் கழித்து இர்பான் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். அதற்கு பிறகு இவருடைய நடிப்பில் எந்த படங்களுமே வரவில்லை. இவர் ஏற்கனவே அளித்த பேட்டியில், சினிமாவில் நடிக்கணும் என்று நான் வரவில்லை. நான் இயக்குனராக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். அதற்காக நான் பெங்களூரில் டைரக்சன் கோர்ஸ் முடித்துவிட்டு நிதின் சத்யாவை ஹீரோவாக வைத்து படம் எடுக்க முயற்சித்தேன். அந்த முயற்சி ஏதோ சில காரணத்தால் நடக்கவில்லை. அதற்கு பிறகு தான் சீரியல் பக்கம் வந்தேன். மீண்டும் எனக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது.

இர்பான் பேட்டி:

அதற்குப் பிறகு எனக்கு ஹீரோவாகவும் படங்களில் வாய்ப்பு வந்தது. இருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எனக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை என்று கூறி இருந்தார். தற்போது இவர் சினிமாவை விட்டு விலகி தன்னுடைய சொந்த ஊர் திண்டுக்கல்லில் குடும்ப பிசினஸையே கவனித்துக் கொள்ள சென்று விட்டதாக தகவல் வருகிறது. இன்னொரு பக்கம் இவர் வருமானத்துக்காக ரொம்ப கஷ்டப்படுவதால் ஹோட்டல் ஒன்றில் சர்வராகவும் வேலை செய்கிறார் என்றெல்லாம் கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் இர்பான், நான் குடும்ப பிசினஸை பார்க்க சொந்த ஊரான திண்டுக்கலுக்கே போய்விட்டேன் என்றெல்லாம் தகவல் வெளியாகிருக்கிறது.

சர்ச்சைகளுக்கு விளக்கம்:

அது கொஞ்சம் கூட உண்மை கிடையாது. நான் சென்னையில் தான் இருக்கிறேன். சினிமாவை எப்படி விட்டுட்டு போவேன். வெற்றியோ? தோல்வியோ? கடைசிவரை முயற்சியை கைவிடக்கூடாது என்ற முடிவில் இருக்கிறேன். கனா, சரவணன் மீனாட்சி போன்ற தொடர்கள் எனக்கு மிகப்பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து பல சீரியல்களிலும் வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. சொல்லப்போனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட என்னை கூப்பிட்டார்கள். ஆனால், நானேதான் டிவி வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்.

ரீ-என்ட்ரி பற்றி சொன்னது:

சினிமாவில் அதிக ஆர்வம் இருந்ததால் சின்னத்திரையில் கவனம் செலுத்த முடியவில்லை. அது மட்டும் இல்லாமல் சீரியலில் இருந்தால் சினிமா பண்ண முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணமும் எனக்கு வந்து. அதனால் தான் சின்னத்திரை பக்கம் வராமல் இருந்தேன். ஒரு சில நேரத்தில் நாம் எடுக்கும் முடிவு ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் மாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் இப்போது சீரியல் பண்ணலாம் என்று நினைக்கிறேன். அதுக்காக இனி சினிமா பக்கம் போகமாட்டேன் என்று அர்த்தம் கிடையாது. சினிமா வாய்ப்பு வரும்போதும் பண்ணுவேன். காலம் தாழ்த்தி எடுத்த முடிவு என்றாலும் கடந்து போனதை நினைப்பதில் எந்த ஒரு பலனும் இல்லை. கூடிய விரைவில் நான் நடிக்கும் தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full