அப்பாவாக போவதை அழகான புகைப்படத்துடன் அறிவித்த வானத்தை போல சீரியல் நடிகர் கார்த்தி

By subhashini · 13/10/2024

வானத்தை போல சீரியல் நடிகர் கார்த்திக் சொல்லி இருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் வானத்தைப்போல. இந்த தொடர் அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை. சீரியலில் அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக துளசி இருந்தார்.

இந்த தொடரில் முதலில் கதாநாயகியாக துளசி ரோலில் ஸ்வேதா நடித்து இருந்தார். சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் நடித்து இருந்தார். பின் துளசி கதாபாத்திரத்தில் இருந்து ஸ்வேதா சீரியலில் இருந்து விலகி நடிகை மன்யா ஆனந்த் நடித்து இருந்தார். பின் சீரியலில் ஸ்வேதாவை தொடர்ந்து சின்ராசுவாக நடித்து வந்த தமனும் விலகி அவருக்கு பதிலாக நடிகர் ஸ்ரீகுமார் நடித்தார். இவர்களை தொடர்ந்து சீரியலில் இருந்து பல நடிகர்கள் விலகி இருந்தார்கள்.

வானத்தைப்போல சீரியல்:

இருந்தாலும், இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. தன் தங்கைக்காக எதுவும் செய்யும் அண்ணனாக சின்ராசு இருந்தார். சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிந்தது. மேலும், இந்த சீரியலில் ராஜபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் அஸ்வின் கார்த்திக். இந்த சீரியலின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஆரம்பத்தில் இந்த சீரியலில் இவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அஸ்வின் கார்த்திக் குறித்த தகவல்:

துளசியை திருமணம் செய்ததற்கு பின்பு இவருடைய கதாபாத்திரம் பாசிட்டிவாக சென்று கொண்டிருந்தது. இதற்கு முன் இவர் சீரியலில் நடித்து இருந்தார். அதோடு இவர் நடிகர் மட்டும் இல்லாமல் தொகுப்பாளரும் ஆவார். இதை அடுத்து கடந்த ஆண்டு நடிகர் அஸ்வின் கார்த்தி அவர்கள் காயத்ரி ஞானசேகரனை காதலிப்பதாக அறிவித்து இருந்தார் . இவர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார்.

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

கார்த்தி திருமணம்:

இவர்களுக்கு கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. அதன் பின் சில மாதங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்களின் திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து சொல்லி இருந்தார்கள். மேலும், இவர்களின் திருமண புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.

View this post on Instagram

A post shared by Ashwinkarthi N (@karthi.actor)

கார்த்தி சொன்ன குட் நியூஸ்:

இந்த நிலையில் நடிகர் கார்த்தி போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தன்னுடைய மனைவி காயத்ரி கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் பதிவிட்டு சந்தோசமான செய்தியை சொல்லி இருக்கிறார். அதோடு தன்னுடைய மனைவி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், பிப்ரவரி மாதம் தங்களுக்கு அழகான குழந்தை வர இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full