ஒரு நாளைக்கு 1 லட்சம் வரை சம்பளம் வாங்கும் சீரியல் நடிகை - 'மூன்று முடிச்சு' சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக்
'மூன்று முடிச்சு' சீரியல் கதாநாயகன் நியாஸ் கான் அளித்திருக்கும் பேட்டி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிய வருகிறது. சமீப காலமாக ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது.
வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசை கட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. அதோட டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த சேனல்களின் சீரியல்கள் தான் மாறி மாறி முதலிடம் பிடிக்கிறது.
மூன்று முடிச்சு:
அந்த வகையில் தற்போது சன் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல்தான் 'மூன்று முடிச்சு'. இந்த சீரியலில் கதாநாயகியாக சுவாதி கொண்டே நடிக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த 'ஈரமான ரோஜாவே 2' சீரியல் மூலம் சுவாதி மக்களிடையே பிரபலமானார். மேலும், இந்த சீரியலில் சுவாதிக்கு ஜோடியாக நியாஸ் கான் நடிக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நியாஸ் கான் குறித்து:
நியாஸ் கான் ஒரு மலையாள சின்னத்திரை நடிகர். இவர் 1987 ஆம் ஆண்டு கொல்லம் மாவட்டம் கேரளாவில் பிறந்தவர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்ருதி சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவேபுதுப்புது அர்த்தங்கள், மந்திரப்புன்னகை போன்ற சீரியல்களில் நடுத்துள்ளார். தற்போது 'மூன்று முடிச்சு' சீரியலில் கதாநாயகனாக சூர்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நியாஸ் கான் பேட்டி:
சமீபத்தில் நியாஸ் அளித்த பேட்டியில் சீரியல்களில் நடிப்பதற்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்து பேசி இருக்கிறார்கள். சினிமாவில் நடிகர்கள் சம்பளத்தை ஏற்றுவதைப் போல, சின்னத்திரையிலும் சமூக வலைதளங்களில் பாலோயர்ஸ் வைத்திருப்பதன் மூலம் சம்பளத்தை ஏற்றுகிறார்கள். நல்லா நடிப்பதன் மூலம் சம்பளம் கொஞ்சம் கொஞ்சமா தான் ஏறும். டக்குனு யாரும் சம்பளத்தை எடுத்து தர மாட்டாங்க. நான் கேள்விப்பட்ட வரைக்கும் எனக்கு தெரிந்து சீரியல் நடிகை ஒருவர் ஒரு நாளுக்கு ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.
https://www.youtube.com/watch?v=XMgWlDwmULI&t=500s
யார் அந்த நடிகை:
ஆனால், அந்த நடிகை யார் என்று நான் சொல்ல மாட்டேன். பசங்கள பொருத்தவரைக்கும் இங்க எல்லாம் ஓகே தான். ஆனா, சீரியல்களில் நடிகைகளுக்கு தான் முக்கியத்துவம் அதிகம். சீரியல்களில் ஹீரோ என்றால் அது பெண்கள் தான். நான் எல்லாம் கொஞ்சம் டீசன்டான சம்பளம் தான் வாங்குகிறேன். அதோட நான் ஒரு லட்சம் சம்பளம் வாங்குற நடிகை என்று சொன்னது பெரிய நடிகைகள் சினிமாவில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். அது யாரா வேணாலும் இருக்கலாம். நீங்க தான் முடிவு பண்ணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.