மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ராகவ்.
ராகவின் முழு பெயர் வெங்கட்ராகவன் ரங்கநாதன். இவர் சினிமா துறையில் நடிகர் மட்டுமல்லாமல் மியூசிக் கம்போஸ்ஸர், தொகுப்பாளர், இயக்குனர் என பல முகங்களைக் கொண்டவர். நடிகர் ராகவ் ஒரு சிறந்த டான்ஸர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், நிறைய நடன நிகழ்ச்சிகளில் கலந்து வெற்றியும் பெற்று உள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் ராகவ் முதலில் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்தும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் தான் இருந்தார். பின் தன் மனைவியுடன் இணைந்து பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இவர் முதன் முதலாக தன்னுடைய நடன திறமையை விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸும் மூலம் தான் வெளிப்படுத்தினார். அதோடு “ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி “ஜோடி மானாட மயிலாட” போன்ற பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்று உள்ளார். அதோடு ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இவர் டான்சில் மட்டும் டாப் இல்லைங்க படிப்பிலேயும் டாப் தாங்க. இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியரிங்கில் கோல்ட் மெடல் பட்டம் பெற்றவர். அதற்கு பிறகு இவர் சார்லஸ் இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளி வந்த ‘நஞ்சிபுரம்’ படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். ஆனால், இவர் இதற்கு முன்னரே ‘நீ ரொம்ப அழகா இருக்க, ஜெர்ரி, சத்தம் போடாதே, சிலம்பாட்டம், எந்திரன், வேலாயுதம், நான் ராஜாவாகப் போகிறேன், கல்யாண சமையல் சாதம் என பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

Advertisement

சமீபத்தில் நடிகர் ராகவ் “டிக்கெட்” என்ற படத்தை இயக்கியும், நடித்தும் உள்ளார். இந்த படம் இங்கிலாந்து நாட்டில் வெளியானது. அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து நாட்டில் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமையும் பெற்றார். நடிகர் ராகவ் தன் உடன் பணி புரிந்த நடிகை ப்ரீத்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் உள்ளது. அந்த பெண்ணோட பெயர் தனிஷா. இந்நிலையில் நடிகர் ராகவ் அவர்கள் மீண்டும் தமிழ் சினிமா உலகிற்கு ரி-என்ட்ரி கொடுக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ராகவ் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பெரிய அளவு வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் இவர் சிறிது காலம் சினிமா துறையில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டு இருந்தார். தற்போது இவர் ஒரு புது படத்தில் கமிட் ஆகி உள்ளார். மேலும், இந்த படத்திற்காக ஒரு புது கெட்டப்பில் உள்ளார் ராகவ். இவர் தன்னுடைய படத்திற்காக இருக்கும் புது கெட்டப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சோசியல் மீடியாவில் என்ன படம்?என்ன கதை?என்று பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Advertisement
Advertisement