தோசை சுட்டு கொடுத்து மன்னிப்பு கேட்கும் சின்னத்திரை சீரியல் நடிகர்- யாருக்குன்னு நீங்களே பாருங்க
தோசை சுட்டு கொடுத்து சின்னத்திரை சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் மன்னிப்பு கேட்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் விஷ்ணுகாந்த். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜீ தமிழில் வெளியாகி இருந்த 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' என்ற சீரியலின் மூலம் தான் சின்னத் திரைக்கு அறிமுகமாகி இருந்தார்.
இதை தொடர்ந்து இவர் 'என்றென்றும் புன்னகை' என்ற சீரியல் நடித்து இருந்தார். இதன் மூலம் இவருக்கு நல்ல ரீச் கிடைத்தது. அதற்குப் பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த 'சிற்பிக்குள் முத்து' என்ற தொடரில் ஹீரோவின் தம்பியாக நடித்திருந்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சீரியல் நடிகை சம்யுக்தாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார் விஷ்ணுகாந்த்.
விஷ்ணுகாந்த் குறித்த தகவல்:
திருமணமாகி 15 நாட்களிலேயே விஷ்ணு-சம்யுக்தா இடையே ப்ரச்சனை ஏற்பட்டது. இதனால் விஷ்ணுகாந்த் பேட்டியில் சம்யுக்தாவை குறை சொல்லி இருந்தார். அதற்கு பின் சம்யுக்தா அவர்கள் பேட்டியில் விஷ்ணு மீது பல குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். இதனால் சம்யுக்தாவிற்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை விஷ்ணுகாந்த் வெளியிட்டு இருந்தார். இப்படி ஒருவரை ஒருவர் சோசியல் மீடியாவில் குறை சொல்லி திட்டிக் கொண்டே இருந்தார்கள்.
விஷ்ணுகாந்த் நடிக்கும் சீரியல்:
ஒரு கட்டத்தில் இருவருமே குறை சொல்வதை நிறுத்தி தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். அந்த வகையில் தற்போது விஷ்ணுகாந்த் தெலுங்கில் வெளியாகி ஒளிபரப்பாகி வரும் 'குண்டிநிண்டா குடிகண்டலு' என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலின் மூலம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிரபலமான சின்னத்திரை நடிகராக விஷ்ணுகாந்த் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சீரியல் குறித்த தகவல்:
மேலும், இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக தேஜஸ்வினி கவுடா நடித்து வருகிறார். இதில் இவர்கள் இருவருக்கும் இடையான ரொமான்ஸ் காட்சி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சேனலில் சிறகடிக்க ஆசை சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங் டாப்பில் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, சமூக வலைத்தளங்களிலும் விஷ்ணுகாந்த் ஆக்டிவாக இருக்கிறார்.
விஷ்ணுகாந்த் பதிவு:
அடிக்கடி இவர் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இவர் தோசை சுடும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இவர் சாரி என்று ஆங்கிலத்தில் எழுதி இருக்கும் தோசையை சுட்டு இருக்கிறார். இதை பார்த்த பலருமே, சீரியல் காட்சியோ? வேறு ஏதாவது காரணமாக இருக்குமோ? என்று கேட்டு வருகிறார்கள்.