சத்தமில்லாமல் இன்று நிட்சயதார்த்தத்தை முடித்த நவீன் - கண்மணி. புகைப்படங்கள் இதோ. கண்மணி மருதாணி தான் ஹைலைட்டே.

By Rajkumar · 15/4/2022

சமீப காலமாகவே சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக செய்திவாசிப்பாளர்களும் பிரபலமாகி வருகிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. அந்த வகையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் நியூஸ் ரீடர் கண்மணி. இவர் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு மீடியாவில் தன்னுடைய கேரியரை தொடங்கினார். இவருடைய வீட்டில் ஆரம்பத்தில் மீடியாவிற்கு எதிர்ப்பு இருந்தாலும் பின் எப்படியோ சம்மதம் வாங்கி படித்தார். பிறகு படித்துக் கொண்டிருக்கும்போதே நியூஸ் ரிடிங் ஆடிஷனில் கலந்து கொண்டார்.

அதன் மூலம் இவர் முதன் முதலில் ஜெயா டிவியில் தான் நியூஸ் ரீடராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதனை தொடர்ந்து இவர் நியூஸ்18, காவிரி போன்ற பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருக்கிறார். தற்போது இவர் சன் டிவியில் நியூஸ் ரீடர் ஆக பணியாற்றி வருகிறார். இவர் அணிந்து வரும் சேலை, ஹேர் ஸ்டைலுக்கு என்றே பெண் ரசிகைகளும் உள்ளார்கள். இதன் மூலம் இவருக்கு சீரியலிலும், சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு வந்தது.

நவீன் - கண்மணி காதல் :

ஆனால், இவர் தன்னுடைய நியூஸ் கேரியரில் தான் கவனம் செலுத்துவேன், நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம். இப்படி ஒரு நிலையில் கண்மணி சீரியல் நடிகர் நவீனை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் இதயத்தை திருடாதே சீரியலின் கதாநாயகன் தான் நவீன். நடிகர் நவீன் சின்னத்திரை வருவதற்கு முன்பே வெள்ளித்திரையில் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

இதயத்தை திருடிய நவீன் :

இவர் முதன் முதலாக மலையாளத்தில் Money Ratnam என்ற படம் மூலம் தான் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன் பின் தமிழில் மசாலா படம், பூலோகம், மாயவன், மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் தான் இவர் சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது இவர் நடித்து வரும் இதயத்தை திருடாதே சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்.

காதலை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள் :

அதோடு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டாப் ரேட்டிங்கில் ஒன்றாக இதயத்தை திருடாதே உள்ளது.மேலும், இந்த சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீனும், சகானா என்ற கதாபாத்திரத்தில் ஹிமா பிந்துவும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் நவீனும், செய்தி வாசிப்பாளர் கண்மணியும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று தகவல் வெளியாகியது.

நவீன் - கண்மணி நிச்சயதார்த்தம் :

அது மட்டுமில்லாமல் நவீன் குடும்பமும், கண்மணி குடும்பமும் நீண்ட கால நண்பர்களாம். இது காதல் திருமணம் இல்லை இரு வீட்டிலும் பேசி முடிவு செய்யப்பட்ட திருமணம் என்று கூறப்படுகிறது. மேலும், இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக உறுதிப்படுத்திஇருந்தனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள விஜயாபார்க்கில் இன்று இவர்களின் திருமண நிச்சயதார்தம் நடைபெற்று இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full