தனது காதலனை அறிமுகம் செய்த விஜய் டிவி சீரியல் நடிகை - அவர் சன் டிவி சீரியல் நடிகரா?

By subhashini · 4/6/2025

தன் காதலனை விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் அறிமுகம் செய்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியலில் சேர்ந்து நடிக்கும் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. நேத்ரன்- தேவதர்ஷினி, சித்து- ஸ்ரேயா, ஷபானா- ஆரியன், மதன்- ரேஷ்மா, ஆலியா மானசா- சஞ்சீவ் என பல பேர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

அந்த வரிசையில் தற்போது விஜய் டிவி நடிகை ஆர்த்தி சுபாஷ் இணைந்து இருக்கிறார். சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் ஆர்த்தி சுபாஷ். இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு youtube-ல் வெப் தொடரில் தான் நடித்து வந்தார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தில் தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் முதல் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற பாண்டவர் இல்லம் என்ற தொடரில் தான் நடித்தார்.

ஆர்த்தி சுபாஷ் குறித்த தகவல்:

இந்த சீரியலில் இவர் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலுமே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த சீரியலின் மூலம் தான் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தது.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற தொடரில் வில்லியாக நடித்திருந்தார். ஆனால், சில காரணங்களால் அந்த சீரியல் சீக்கிரமாகவே முடித்து விட்டார்கள்.

ஆர்த்தி நடிக்கும் சீரியல்:

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிந்து பைரவி என்ற தொடரில் பைரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலுமே ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை நன்றாக சென்று கொண்டிருக்கின்றது. முதலில் இந்த தொடரில் பைரவியாக ரவீனா தான் ஒப்பந்தமாகி இருந்தார். திடீரென்று அவர் விலகியதால் தான் இந்த ரோலில் ஆர்த்தி சுபாஷ் கமிட்டானார். மேலும் இவர் சீரியலில் மட்டுமில்லாமல் குறும்படங்கள், விளம்பரங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார்.

காதல் சொல்லிய ஆர்த்தி:

அது மட்டும் இல்லாமல் இவர் மாடலாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் சோசியல் மீடியாவில் எப்போதுமே படு ஆக்டிவாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய காதலரை ஆர்த்தி சுபாஷ் அறிமுகம் செய்து வைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ஆர்த்தி சுபாஷ் அவர்கள் சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியலின் நாயகன் பவன் ரவீந்திராவை தான் காதலிக்கிறார்.

View this post on Instagram

A post shared by Aarthi subash ⚡️ (@aarthisubash_official)

காதலன் குறித்த தகவல்:

இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம், வீடியோவை ஆர்த்தி சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு பவன் ரவீந்திரன் உடைய பிறந்த நாளில் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துகளும் ஆர்த்தி தெரிவித்திருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் எப்போது திருமணம் என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full