புதிய சொகுசு காரை வாங்கி இருக்கும் சீரியல் நடிகை அபிநவ்யா, வைரலாகும் வீடியோ இதோ

By krithika · 3/2/2025

சீரியல் நடிகை அபிநவ்யா புதிய கார் வாங்கியுள்ள செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் தீபக் – அபிநவ்யா. இவர்கள் இருவரும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த 'திருமணம்' என்ற சீரியலில் நடித்து இருந்தார்கள். இந்த சீரியல் இவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை கொடுத்தது.

பின் இவர்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த 'என்றென்றும் புன்னகை' என்ற சீரியலில் நடித்து இருந்தார்கள். இந்த சீரியலின் மூலம் தான் தீபக்-க்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அதற்கு பின் தீபக் சித்திரம் பேசுதடி, ஈரமான ரோஜாவே 2 சீரியல்களில் நடித்து இருந்தார். அதேபோல் அபிநவ்யா அவர்கள் சித்திரம் பேசுதடி, கண்மணி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.

அபிநவ்யா-தீபக் திருமணம்:

இதனிடையே இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். பின் இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். இதனை தொடர்ந்து அபி நவ்யா மற்றும் தீபக் இருவருக்கும் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னையில் இருக்கும் ஒரு திருமண ஹாலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமண புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

ஆண் குழந்தை:

திருமணத்திற்கு பிறகு அபிநவ்யா - தீபக் தம்பதி தாங்கள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்கள். அதன்பின், அபிநவ்யாவிற்கு வளைகாப்பு விழாவும் சிறப்பாக நடத்தப்பட்டது‌. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தீபக்- அபிநவ்யா தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நம் மீது பொழிந்த கடவுளின் கருணையின் விளைவாக விலைமதிப்பற்ற பரிசை உணர்ந்தோம். குழந்தையை என் கைகளில் வைக்கப்பட்ட போது, நான் உயிருடன் மற்றும் உற்சாகமாக உணர்ந்தேன் என்று பதிவிட்டு இருந்தார்.

கயல் சீரியல்:

தற்போது அபிநவ்யா, சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'கயல்' சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் சைத்ரா ரெட்டியின் தங்கையாக, ஆனந்தி என்னும் கதாபாத்திரத்தில் அபிநயா நடித்து வருகிறார். குடும்பத்திற்காக தனது சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு போராடும் ஒரு பெண்ணின் கதை தான் 'கயல்'. இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by CIRCUITS 99 (@circuits99)

புது கார்:

தற்போது சின்னத்திரை பிரபலங்கள் தொடர்ந்து புதிய வீடு, புதிய கார் வாங்கி வரும் நிலையில் அபிநவ்யா அவர்களும் புதிய கார் வாங்கியிருக்கிறார். இவர் Volvo V40 என்னும் சொகுசு காரை தான் வந்திருக்கிறார்‌ இதன் விலை சுமார் 30 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. நடிகை அபிநவ்யா புதிய கார் வாங்கிய செய்தி வீடியோவுடன் வெளியான நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full