அபியும் நானும் சீரியல் நடிகை அகிலாவுக்கு குழந்தை பிறந்தாச்சு - அவரே வெளியிட்ட அழகான புகைப்படம்

By subhashini · 28/9/2025

சீரியல் நடிகை அகிலாவிற்கு குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அகிலா. இவர் 20 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சீரியலில் நடிக்க அறிமுகமானார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் என்ற சீரியல் மூலம் தான் அகிலா இல்லத்தரசிகளின் மத்தியில் அறிமுகமானார். இந்த சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இவர் ரோஜா கூட்டம், சிவசக்தி, திருமதிசெல்வம், இளவரசி, உதிரிப்பூக்கள் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்திலும் மிரட்டி இருக்கிறார்.

அகிலா நடித்த சீரியல், படங்கள்:

மேலும், இவர் சீரியலில் மட்டும் இல்லாமல் சரவணன், மனதோடு மழைக்காலம், கண்ணும் கண்ணும், பொல்லாதவன், அரசாங்கம், திருவண்ணாமலை போன்ற பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவருக்கு சினிமாவில் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இதற்கிடையில் இவர் சீசன்ஸ் ஈவன்ட்ஸ் என்ற நிறுவனமும் நடத்தி வருகிறார். அதன் பின் கடைசியாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த அபியும் நானும் என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டிருந்தார்.

அகிலா கர்ப்பம்:

2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த அபியும் நானும் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் கிரிஜா என்ற கதாபாத்திரத்தில் அகிலா நடித்தார். அதற்குப்பின் இவர் பெரிதாக எந்த சீரியலும் நடிக்கவில்லை. சமீபத்தில் தான் இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி இணையத்தில் வைரலாகி இருந்தது. இதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

அகிலா குழந்தை:

அதோடு இவருடைய வளைகாப்பு புகைப்படங்கள், வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் நடிகை அகிலாவிற்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகை அகிலாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த சந்தோஷமான தகவலை அகிலாவே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்து பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full