சத்தம் இல்லாமல் திருமணத்தை முடித்த 'கண்ணான கண்ணே' சீரியல் நடிகை அக்ஷிதா- மாப்பிள்ளை யார் தெரியுமா?
'கண்ணான கண்ணே' சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு திருமணம் நடந்திருக்கும் செய்தி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அக்ஷிதா போப்பையா. இவர் கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் பிறந்தவர். இவர் தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மைசூரில் முடித்தார். மாடல் அழகியாக தான் இவர் மீடியாவிற்கு நுழைந்தார்.
அதற்குப்பின் இவர் தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி இருந்த 'அழகு' என்ற சீரியலின் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமாகி இருந்தார். அதை அடுத்து இவர் சில கன்னட சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவருக்கு சினிமாவில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்குப் பின் இவர் சின்னத்திரை சீரியல் பக்கமே வந்துவிட்டார்.
அக்ஷிதா குறித்து:
அதிலும், இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த 'கண்ணான கண்ணே' தொடரின் மூலம்தான் பிரபலமாக இருந்தார். அப்பா- மகள் இடையே இருக்கும் பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட தொடர் இது. தெலுங்கில் 'பௌர்ணமி' என்ற டைட்டிலில் ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் தமிழில் 'கண்ணான கண்ணே' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முதன் முதலில் ஒளிபரப்பப்பட்டது.
அக்ஷிதா நடித்த சீரியல்கள்:
மேலும், இந்த தொடரில் கதாநாயகனாக ராகுல் ரவி நடித்திருந்தார். இந்த தொடரில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் இந்த தொடரில் பிரித்திவிராஜ், ப்ரீத்தி சஞ்சீவ், அக்ஷிதா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இதை எடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்த 'தமிழும் சரஸ்வதியும்' என்ற சீரியலிலும் நடித்திருந்தார்.
அக்ஷிதா நிச்சயதார்த்தம்:
அதற்குப்பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ' சீதா ராமன்' என்ற தொடரிலும் கதாநாயகியின் அக்கா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதை தொடர்ந்து, இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. மேலும், இவர் பெங்களூருவை சேர்ந்த எக்சிகியூட்டிவ் ப்ரொடியூசர் மற்றும் நடிகர் ப்ரீதம் சுரேஷ் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் கூட சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அக்ஷிதா - ப்ரீதம் திருமணம்:
இந்நிலையில் நேற்று நவம்பர் 23ஆம் தேதி, அக்ஷிதா தனது காதலர் பிரீதம் சுரேஷை கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் குடும்ப முறைப்படி நடந்துள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பங்கேற்றுவார்கள். தற்போது இவர்களின் திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அக்க்ஷிதா பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.