பிரம்மாண்ட வீட்டை கட்டியுள்ள ஆல்யா மானஸாவின் ஒரு நாள் சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா? அவரே சொன்ன தகவல்

By subhashini · 15/8/2024

சீரியல் நடிகை ஆலியா மானசா ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. இவர்கள் இருவருமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ தொடரின் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள். இந்த தொடரின் சீரியலின் மூலம் இவர்கள் இருவருமே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள்.

மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் பிரபலமாக சென்று கொண்டு இருக்கும் ‘கயல்’ சீரியலில் நடித்து வருகிறார்.

சஞ்சீவ் – ஆல்யா நடிக்கும் சீரியல்கள்:

அதற்கு பின் மீண்டும் கர்ப்பமான ஆல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதோடு இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். இவர்கள் பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பின் மீண்டும் ஆலியா அவர்கள் சன் டிவியில் சரிகம புரொடக்ஷன் தயாரிக்கும் ‘இனியா’ தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

இனியா சீரியல் குறித்த தகவல்:

இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதலில் இந்த சீரியலை வேறொரு இயக்குனர் இயக்கியிருந்தார். தற்போது ஸ்டாலின் என்பவர் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் ஆல்யாவுக்கு ஜோடியாக ரிஷி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் டிஆர்பி ரேட்டிங் டாப்பிலும் இந்த சீரியல் வந்துவிட்டது. இப்படி இருவரும் பிசியாக நடித்து வந்தாலும் குடும்பம், குழந்தை, கேரியர் என்று பிசியாக இருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=gUHcfjLL0wI

ஆல்யா- சஞ்சீவ் புது வில்லா புகைப்படம்:

அதோடு இவர்களிடம் நிறைய சொகுசு கார்கள் இருக்கிறது. மேலும், இவர்கள் ஏற்கனவே அப்பார்ட்மெண்ட் ஒன்றில் ஃபிளாட் ஒன்று வாங்கி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சென்னையில் சொந்தமாக தனியாக வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்கள். சமீபத்தில் தான் இவர்கள் தங்களின் கனா வில்லா ஒன்றை கட்டி இருக்கிறார்கள். சமீபத்தில் தான் இவர்கள் தாங்கள் கட்டி முடித்த வில்லாவுக்கு கிரகப்பிரவேசம் நடத்தி இருந்தார்கள். இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலருமே கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள்.

ஆலியா சம்பளம்:

இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை ஆலியா மானசா, நாங்கள் இதற்கு முன்பு ஒரு சின்ன வீட்டில் எல்லோருமே கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம். ஆனால், இப்போது நாங்கள் ஆசைப்பட்ட மாதிரி கனவு வீடு வாங்கி இருக்கிறோம். இந்த வீடு சுமார் 1.8 கோடி ரூபாய் உடைய மதிப்பில் கட்டப்பட்டது. இதை நாங்கள் முழுக்க முழுக்க லோனில் தான் கட்டி இருக்கிறோம். அதே போல் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இனியா தொடருக்கு ஒரு நாள் சூட்டிங்க்கு 20,000 முதல் 25,000 சம்பளம் தந்தார்கள். இப்போது ஒருநாள் சூட்டிற்கு 50000 லிருந்து 60,000 வரை சம்பளம் வாங்குகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full