'இந்த தப்பை மறுபடியும் பண்ண மாட்டேன்' - மீண்டும் குடும்பத்துடன் இணைந்த ஆல்யா மானஸா உருக்கம்
நீண்ட இடைவேளைக்கு பிறகு தன்னுடைய பெற்றோர்களுடன் ஆலியா மனசா இணைந்திருக்கும் தகவல் தான் தற்போது வருகிறது. சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா மானசா. இவர்கள் இருவருமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள். இருவரும் இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார்கள்.
மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களுடைய திருமணத்திற்கு ஆல்யாவின் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. ஆல்யா தன்னுடைய பெற்றோர்களை எதிர்த்து தான் இந்த திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனதற்கு பின் ஆல்யா தன்னுடைய பெற்றோர்களுடன் பேசவும் இல்லை, அவர்களும் தன்னுடைய மகளை சந்திக்க வரவும் இல்லை. இரண்டு குழந்தைகள் ஆகியும் அவர்கள் ஆல்யாவை மன்னிக்கவில்லை.
ஆல்யா பெற்றோர்கள்:
இப்படி இருக்கும் நிலையில் பல வருடங்களுக்கு பிறகு ஆலியாவை அவருடைய பெற்றோர்கள் நேரில் சந்தித்திருக்கிறார்கள். இதை அவருடைய கணவர் சஞ்சீவ் தான் ஆலியாவுக்கு சர்ப்ரைஸ் செய்திருக்கிறார். ஆலியா பெற்றோர்களை தங்களுடைய வீட்டிற்கு அழைத்து வந்து சஞ்சீவ் சப்ரைஸ் கொடுத்திருக்கிறார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இது தொடர்பாக ஆலியா பதிவு ஒன்றும் போட்டிருக்கிறார்.
ஆல்யா பதிவு:
அதில் அவர், belated ஹாப்பி பர்த்டே மை பாப்பு குட்டி. முதல் முறையாக என்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து உன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறோம். ரொம்ப நன்றி. நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன். நீ என்னுடைய வாழ்க்கையில் கிடைத்ததற்கு நான் ரொம்ப பாக்கியம் செய்திருக்கிறேன். நீ ஜென்டில்மேன். நீ என் வாழ்க்கையில் வந்ததற்கு நான் தான் அதிர்ஷ்டம் செய்து இருக்கிறேன். ஆனால், உன்னுடைய பிறந்தநாளுக்கு என்னால் சரியாக வாழ்த்து கூட சொல்ல முடியவில்லை.
பிறந்தநாள் வாழ்த்து:
வேலையின் அழுத்தம் அதிகமாக இருந்ததால் தாமதமாக பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி இருக்கிறேன். இருந்தாலும் அடுத்த முறை இந்த தவறை செய்து கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். தற்போது ஆல்யா மானசா தன்னுடைய பெற்றோர்களுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.
சஞ்சீவ் – ஆல்யா நடிக்கும் சீரியல்கள்:
தற்போது சஞ்சீவ் சன் டிவியில் பிரபலமாக சென்று கொண்டு இருக்கும் ‘கயல்’ சீரியலில் நடித்து வருகிறார்.
ஆலியா 'இனியா' தொடரில் நடித்து வருகிறார். அதோடு இவர்கள் தனியாக யூடுயூப் சேனல் தொடங்கி யிருக்கிறார்கள். ஆல்யா- சஞ்சீவ் இருவரும் குடும்பம், குழந்தை, கேரியர் என்று பிசியாக இருக்கிறார்கள். அதோடு இவர்களிடம் நிறைய சொகுசு கார்கள் இருக்கிறது. சமீபத்தில் கூட ஆல்யா மானசா- சஞ்சீவ் இருவரும் தனியாக கட்டி இருக்கும் கனவு வீட்டின் கிரகப்பிரவேச புகைப்படம் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.