மீண்டும் கர்ப்பமாக இருக்கும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை - கணவர் மகனுடன் வெளியிட்ட கியூட் போஸ்ட்
சின்னத்திரை சீரியல் நடிகை அனு இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும், சீரியல் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சன் தொலைக்காட்சி தான்.
அந்த வகையில் சன் தொலைக்காட்சிகளில் புதுபுது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த பாண்டவர் இல்லம் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த தொடர் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இது முழுக்க முழுக்க குடும்ப, காதல், நகைச்சுவை நாடகம். இந்த தொடரில் பாப்ரிகோஷ், நரேஷ் ஈஸ்வர், ஆர்த்தி சுபாஷ், குகன் சண்முகம் உட்பட பலர் நடித்தார்கள்.
அனு குறித்த தகவல்:
அண்ணன்- தம்பிகள் இடையேயான உறவு குறித்த தொடர். அதுமட்டும் இல்லாமல் பாண்டவர் இல்லத்தை ஐந்து மருமகள்களும் எப்படி பொறுப்புடன் வழிநடத்துகிறார்கள்? பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பது தான் சீரியலின் கதை. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இந்த சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் நடிகை அனு. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரையில் நடிக்க அறிமுகம் ஆகி இருந்தார்.
அனு குடும்பம்:
அதனை தொடர்ந்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மெல்ல திறந்தது கதவு என்ற தொடரில் வில்லியாக நடித்திருந்தார். அப்படியே இவர் சன், விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். மேலும், சின்னத்திரை சீரியலின் மூலம் இவருக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் நடிப்பது மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருந்தார். இதனிடையே இவர் விக்னேஷ் என்ற விக்கி என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அனு குழந்தை:
திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து அணு சீரியலில் நடித்து வருகிறார். மேலும், திருமணம் ஆகி 5 ஆண்டுகள் கழித்து அனு கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். பின் நடிகை அனுவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் அனு சீரியலில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவும் மருமகளே வா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
மீண்டும் கர்ப்பமாக இருக்கும் அனு:
இப்படி இருக்கும் நிலையில் அனு இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அனு விக்னேஷ் தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் நடித்த அழகிய புகைப்படத்தை பகிர்ந்து தான் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் செய்தி கூறியிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே அனுவிற்கு வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள்.