என்னை ரொம்ப மோசமாக என் அம்மாவே விமர்சித்தார் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை சாந்தினி வருத்தம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. முதல் சீசனை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், முதல் சீசனுக்கும் இரண்டாம் சீசனுக்கும் சம்மந்தமே இல்லை. தந்தை மகனுக்கு இடையே இருக்கும் உறவை மையமாக வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சீரியலில் தங்கமயில் செய்த பித்தலாட்ட வேலை எல்லாம் சரவணனுக்கு தெரிந்ததால் தங்கமயில் குடும்பத்தின் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார். அந்த சமயம் பார்த்து மளிகை கடைக்கு தங்கமயில் அப்பா வேலைக்கு வருகிறார்.
அவர் கடை வேலை செய்யாமல் தேவையில்லாத வேலைகள் எல்லாம் செய்கிறார். இதனால் சரவணனுக்கு பயங்கர கடுப்பாகிறது. இன்னொரு பக்கம் அரசாங்கம் வீடு கொடுத்து இருப்பதால் அங்கேயே போகலாம் என்று செந்தில் சொல்கிறார். அதில் மீனாவிற்கு உடன்பாடில்லை. இருந்தாலும் மீனாவை செந்தில் கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவருமே புதிதாக டிராவல்ஸ் தொடங்கி இருக்கிறார்கள். இப்படி அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மேலும், இந்த சீரியலில் சுகன்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் சாந்தினி. ஆரம்பத்தில் இவர் சின்ன சின்ன வேடங்களில் தான் சீரியலில் நடித்து வந்தார். தற்போது இவர் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியல் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் பிற தமிழ் மொழி சேனல்களிலும் நடித்திருக்கிறார்.
சாந்தினி குறித்த தகவல்:
குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தைப்போல என்ற சீரியலின் மூலம் இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். பெரும்பாலும் இவர் வில்லி ரோலில் தான் நடித்து வருகிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சுகன்யாவாக மிரட்டிக் கொண்டு வருகிறார்.
சமீபத்தில் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் கூமாபட்டி தங்கபாண்டியனுடன் இணைந்து நடனமெல்லாம் ஆடி இருந்தது அனைவரும் அறிந்தது.
சாந்தினி சொன்னது:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழா நிகழ்ச்சியில் சாந்தினி கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர், இதெல்லாம் மூஞ்சியா, எங்க ஜெயிக்கப் போற, இதெல்லாம் வேலையில்லாத வேலை என்று என்னுடைய அம்மாவே என்னை விமர்சித்து இருந்தார். ஆனால், என்னை மக்கள் இப்போது ஏற்றுக் கொண்டார்கள் என்று எமோஷனலாக கண்கலங்கி பேசியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தான் சாந்தினி சின்னத்திரையில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.