எனக்கு இந்த அணி ஜெயிக்க வேண்டும் - மடித்த டி-ஷர்ட், கையில் பேட்டுடன் தர்ஷா கொடுத்த போஸ்.

By Rajkumar · 2/10/2020

சமீப காலமாகவே சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகின்றனர். அதிலும் சமீப காலமாக சமூக வலைதளத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகள் ஏராளம். அந்த வகையில் ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா, ஷிவானி என்று பலர் சமூக வலைதளத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CF1AKaih5zF/?igshid=1eauy5ikxzf8a

அதிலும் பகல் நிலவு சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்து வந்த ஷிவானி சமீப காலமாக கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அதிலும் 4 மணி 5 மணி என்று தினமும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். ஷிவானியை போலவே சமீப காலமாக கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார் சீரியல் நடிகை தர்ஷா குப்தா.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் "முள்ளும் மலரும்" என்ற தொடரில் நடித்து வருகிறார். பின் சன் தொலைகாட்சியில் "மின்னலே" என்கிற தொடரிலும் நடித்து வருகிறார்.தற்போது இவர் விஜய் தொலைகாட்சியில் இன்று ஒளிபரப்பாகும் "செந்தூரப்பூவே" என்கிற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

https://www.instagram.com/p/CF1B9Sxhnfd/

எப்போதும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இதனால் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு, சென்னை அணி ஜெயிக்க வேண்டும் என்று புகைப்படம் ஒன்றை போட்டுள்ளார் தர்ஷா. இந்த ஆண்டு Ipl தொடரின் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய சென்னை அணி, அதை தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full