எங்களுடைய திருமண நாளில் ஒரு அழகான புதிய அத்தியாயத்தை எதிர்பார்க்கிறோம் - கனா சீரியல் நடிகை தர்ஷனா போஸ்ட்

By subhashini · 22/4/2025

சீரியல் நடிகை தர்ஷனா கர்ப்பமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பேர் ஆதரவை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் புது புது கதைகளைத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.

குறிப்பாக, கார்த்திகை தீபம், கனா, நளதமயந்தி, சீதாராமன், அண்ணன் போன்ற பல சீரியல்கள் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் ஜீ தமிழில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பான பிரபலமான சீரியல் கனா. இந்த தொடரில் கதாநாயகி எப்படியாவது ஓட்டப்பந்தத்தில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர் அப்பா நினைக்கிறார்.

கனா சீரியல்:

இதனால் அப்பா மகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. ஹீரோயின் கனவிற்கு ஹீரோ துணையாக நிற்கிறார். அப்பா- மகள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? கதாநாயகி தன்னுடைய லட்சியத்தில் வெற்றி பெற்றாரா? என்பதே சீரியல் கதை. இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் கதாநாயகியாக தர்ஷனா- அன்பரசி ரோலில் நடித்தார். இவர் இதற்கு முன்பே பிற சேனல் சீரியல்களில் நடித்திருந்தார். அதிலும் இவர் கண்ட நாள் முதல், நீ தானே என் பொன் வசந்தம் போன்ற சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=8kJ_fMUjg1o

தர்ஷனா குறித்த தகவல்:

மேலும், இந்த கனா சீரியல் நன்றாக சென்று கொண்டு இருக்கும் போதே தர்ஷனா சீரியலில் இருந்து விலகி விட்டார். காரணம், தர்ஷனாவிற்கு திருமணம் நடைபெற இருப்பதால் கனா சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார் என்று கூறப்பட்டது. கடந்த ஆண்டு தான் தர்ஷனாவிற்கும் அபிஷேக் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று இருந்தது. அபிஷேக் பல் மருத்துவர். தர்ஷனாவும் அதே துறையை சேர்ந்தவர் தான்.

View this post on Instagram

A post shared by Dr.Dharshana ashokan (@dharshana_ashokan)

தர்ஷனா கர்ப்பம்:

இருவருமே காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்கள்.திருமணத்திற்கு பிறகும் தர்ஷனா சீரியலில் நடிப்பாரா? என்று அவருடைய ரசிகர்கள் எல்லாம் கேட்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் இவர் கர்ப்பமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருக்கிறார். தர்ஷனா அவர்கள் பிரக்னன்சி போட்டோ சூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.

தர்ஷனா பதிவு:

அதில் அவர், எங்களுடைய முதலாம் ஆண்டு திருமண நாளில் எங்களுடைய குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த சந்தோஷமான செய்தி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். இது ஒரு அழகான புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் என்று கூறியிருக்கிறார். தற்போது இவருடைய பதிவு இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full