தனது மகளுடன் சென்று புதிய கார் வாங்கிய சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா - குவியும் வாழ்த்துக்கள்
சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா
சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. இவர் தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பலருக்கும் பரிட்சயமானவர். அதற்கு பிறகு இவர் எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதுமட்டுமில்லாமல் பல ஷார்ட் பிலிம்களில் கூட கேப்ரில்லா நடித்திருக்கிறார்.
மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் ஐரா. இந்த படத்தில் சிறுவயது நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் கேப்ரில்லா. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
அதுமட்டும் இல்லாமல் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த சுந்தரி சீரியலில் நடித்து இருந்தார்.
கேப்ரில்லா குறித்த தகவல்:
இந்த சீரியல் மூலம் கேப்ரில்லா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து இருந்தார். அதோடு இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து முடியும் வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எண்ணற்ற இன்னல்களை சமாளித்து வரும் கதாபாத்திரம் தான் சுந்தரி. அதுமட்டுமில்லாமல் சுந்தரி கருப்பு நிறம் என்பதால் அதற்கும் சாதனை செய்வதற்கும் சம்பந்தமில்லை என்பதை முறியடித்து போராடி இருந்தார்.
கேப்ரில்லா குடும்பம்:
அதனாலே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாக இடம் பிடித்து விட்டது. இந்த சீரியல் இரண்டு பாகம் ஒளிபரப்பாகி இருந்தது. கடந்த ஆண்டு தான் இந்த சீரியல் முடிந்தது. இதற்கிடையில் கேப்ரில்லா அவர்கள் சுருளி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் இவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். மேலும், இவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறார். பலரும் வாழ்த்து சொன்னார்கள்.
கேப்ரில்லா புது கார்:
இப்படி இருக்கும் நிலையில் கேப்ரில்லா சொல்லி இருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கேப்ரில்லா தனது மகள் மற்றும் குடும்பத்திருடன் சென்று புதிய காரை வாங்கி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கேப்ரில்லா இருக்கிறார். பலருமே வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள்