சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா சொன்ன குட் நியூஸ் - என்ன தெரியுமா?

By subhashini · 30/9/2025

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா சொல்லி இருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் எப்போதுமே டிஆர்பியில் நம்பர் 1 சீரியல் ஆக இருப்பது சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரை எஸ். குமரன் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த தொடரில் ஹீரோவாக முத்து என்ற கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த், ஹீரோயினியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் கோமதி பிரியாவும் நடிக்கிறார்கள். இவர்களை அடுத்து சீரியலில் சுந்தர்ராஜன், அணிலா, சல்மா, ஸ்ரீ தேவா, பிரீத்தி உட்பட பலர் நடிக்கிறர்கள். மேலும், சீரியலில் ஹீரோ பிடித்து படிக்காதவர். தன்னுடைய அப்பாவிற்காக எதையும் செய்யக்கூடியவர். இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை நடத்தி வருகிறார். எதிர்பாராத விதமாக மீனாவை முத்துவுக்கு திருமணம் செய்து வைக்கிறார் அண்ணாமலை. மீனா வந்த பிறகு முத்துவின் வாழ்க்கையே மாறுகிறது.

சிறகடிக்க ஆசை:

அதற்குப்பின் பணக்கார பெண் என நினைத்து ரோகினியை தன்னுடைய மூத்த மகன் மனோஜிக்கு விஜயா திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், அவர் பொய் சொன்னார் என்று தெரிந்து விட்டது. ரவி பணக்கார பெண் சுருதியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். தினமும் இந்த மூன்று ஜோடிகளுக்கு இடையே நடக்கும் கலாட்டா கலவரங்கள் தான் சீரியல். தற்போது சீரியலில் ராஜா-ராணி செய்த சதியால் மனோஜ் சிக்கி கொள்கிறார். இதற்கு முத்து கொடுத்த ட்விஸ்ட் தான் அதிரடியாக தான் இருக்கிறது. இனி அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பிலேயே சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

கோமதி ப்ரியா குறித்த தகவல்:

மேலும், இந்த தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களின் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை கோமதி ப்ரியா. இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். அதில் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோக்களின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதற்கு பின் தான் இவருக்கு சின்னத்திரை சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இவர் முதன் முதலாக 2018 ஆம் ஆண்டில் வெளிவந்திருந்த ‘ஓவியா’ என்ற சீரியலில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘வேலைக்காரன்’ தொடரில் ஹீரோயினியாக நடித்திருந்தார்.

View this post on Instagram

A post shared by 2K Boomer Bestie (@2kboomerbestie)

கோமதி ப்ரியா சொன்ன நியூஸ்:

அதன் பின் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி சீரியல்களில் நடித்து வருகிறார். இருந்தாலும், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தான். இப்படி இருக்கும் நிலையில் கோமதி பிரியா சொல்லி இருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இவர் புதிய ப்ராஜெக்ட் ஒன்றில் கமிட் ஆகியிருக்கிறார். அடியே சிறுக்கி மகளே என்ற ஆல்பம் பாடலில் தான் கோமதி பிரியா நடித்திருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் ஹீரோவாக நடித்திருக்கிறார். கிராமத்து சாயலில் இந்த பாடல் உருவாகி இருக்கிறது. கூடிய விரைவில் இந்த பாடல் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full