சத்தமில்லாமல் நடந்த திருமணம், பத்து பேர் கூட வரல - 'வாணி ராணி' ஜெனிப்ரியா எக்ஸ்குளுசிவ்

'வாணி ராணி' ஜெனிப்ரியா திருமணம்

By subhashini · 8/6/2026

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் ஜெனிபிரியா என்கிற சாரா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த வாணி ராணி, அழகு போன்ற சீரியல்களில் நடித்து இருந்தார். அதோடு இவர் சில படங்களிலும் நடித்ததாக கூறப்படுகிறது. அதற்குப்பின் இவர் சொந்தமாக மேக்கப் ஸ்டுடியோ தொடங்கி செலிப்ரட்டிகள் மேக்கப், மேக்கப் பயிற்சி வகுப்பு என பிசியாக இருக்கிறார்.

அதன் பின் 2024 ஆம் ஆண்டு சென்னையில் இவருக்கு சிங்கப்பூரை சேர்ந்த நேசன் என்பவருக்கு நிச்சயதார்த்தம் ஆனது. ஆனால், திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன்பு நேசன் தன்னை ஏமாற்றி தன்னுடைய நகைகளை எல்லாம் பறித்து சென்று விட்டதாக சாரா போலீசிலும் புகார் கொடுத்திருந்தார். இப்படி இவருடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளில் இருந்து மீண்டு வந்த சாரா தற்போது சந்தோசமாக இருக்கிறார்.

சாரா திருமணம்:

அதாவது சாரா அவர்கள் மோகன் சுந்தர் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மன் கோவில் ஒன்றில் தான் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சாரா, மோகன் சுந்தர் ஆடிட்டராக இருக்கிறார்.

சாரா பேட்டி:

தனியாக கம்பெனியும் வைத்திருக்கிறார். நாங்கள் பரஸ்பரமாக அறிமுகமானதும் ஒருவருக்கு ஒருவர் சந்தித்து மனது விட்டு பேசினோம். அவங்க தொழில், குடும்பம், கடந்த காலம்னு எல்லாவற்றையும் ஷேர் பண்ணிக் கொண்டோம். நல்ல புரிதல் எங்களிடம் உருவானது. அதனாலே சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்வோம்.

திருமணம் பற்றி சொன்னது:

பின் கடந்த சில வருடங்களாக கொஞ்சம் நெகட்டிவிட்டி சூழ்நிலை இருந்ததால் திருமணத்தை சிம்பிளாக செய்துவிடலாம் என்று தோன்றியது. 10 பேர் வரைக்கும் தான் கல்யாணத்தில் கலந்து கொண்டார்கள். டிவி, சினிமா சைடில் இருந்து யாருமே கூப்பிடவில்லை. சீக்கிரத்திலேயே ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்யலாம் என்று இருக்கும். அப்போது எல்லாரையும் இன்வைட் பண்ணலாம் என்று இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full