இதுல சம்பாதிக்கிற காச வச்சு எப்படி சாப்புடுறீங்க - விஜய் சேதுபதியை திட்டிய சீரியல் நடிகை லட்சுமி

By subhashini · 25/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 20 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

பின் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மூன்றே நாளில் போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருந்தார். பின் முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி வெளியேறி இருந்தார். மேலும், இரண்டாவது வாரத்திற்கான எவிக்ஷனில் குறைவான வாக்குகளை அப்சரா தான் வெளியேறி இருந்தார். பின் வழக்கம் போல் போட்டியாளர்கள் இடையே சர்ச்சை சண்டை கலவரம் சென்று கொண்டு இருக்கிறது. குறிப்பாக, ரொம்ப மோசமாக போட்டியாளர்கள் பேசி கொள்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி தொடர்பாக சீரியல் நடிகை லட்சுமி பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

நடிகை லட்சுமி வீடியோ:

அதில் அவர், நான் இதைப் பற்றி பேச வேண்டாம் என்று தான் ஒதுங்கி இருந்தேன். இருந்தாலுமே என்னை தேடி நிறைய பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி வந்து கொண்டு தான் இருக்கிறது. சீப் பாக்ஸ் சீசன் 9 பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறேன். உச்சக்கட்டத்தின் கேவலமாக சென்று கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியை வழங்குபவர்களுக்கும் தொகுப்பாளர்களுக்கும் மனிதாபிமானமே கிடையாதா? டீசன்ட் செய்ய கிடையாதா? அந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு தானே நீங்கள் தொகுத்து வழங்குகிறீர்கள்.

பிக் பாஸ் பற்றி சொன்னது:

உங்களால் எப்படி இதை பண்ண முடியுது? உங்கள் வீட்டு குழந்தைகள் இதை பார்க்கிறார்களா? இல்லையா? அவங்க எல்லாம் சோசியல் மீடியாவில் இருக்கிறார்களா? இல்லையா? உங்களுக்கு கொஞ்சமாவது சமூக அக்கறை இருக்கிறதா? இல்லையா? இந்த கன்றாவியான நிகழ்ச்சியை டெலிகாஸ்ட் செய்து என்ன சாதிக்கப் போகிறீர்கள். அதன் மூலம் சம்பாதிக்கும் காசை வைத்து எப்படி சாப்பிட போகிறீர்கள். இந்த நிகழ்ச்சி ஒரு நாத்தம் புடிச்ச குப்பை. அதை எல்லாம் தூக்கி வெளியே போட்டு அந்த இடத்தை சுத்தம் செய்யுங்கள்.

View this post on Instagram

A post shared by Laxmi (@laxmima_official)

விஜய் சேதுபதி பற்றி சொன்னது:

மாதர் சங்கங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றது தெரியவில்லை. ஒரு பாடல், ஒரு வசனம் வந்தால் மட்டும் கொடி பிடித்துக் கொண்டு வந்து விடுவார்கள். இன்னைக்கு நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இதைப் பற்றி கேட்கணும் என்று உங்களுக்கு தெரியவில்லையா?
உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? விஜய் சேதுபதி சார். உங்களால் அதை நிறுத்த முடியாதா?
கேவலமாக பேசுபவர்களை ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பக் கூடாதா? என்னதான் செய்கிறீர்கள்.
இது சமூக சீர்கேடு நிகழ்ச்சி. தயவு செய்து இந்த சீசனை இதோட நிறுத்துங்க என்று கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full