அசிங்கமா வாய்ஸ் நோட், மார்ஃபிங் போட்டோவ ப்ரண்ட்ஸுக்கு அனுப்பினாங்க - கதறிய சீரியல் நடிகை.

By Rajkumar · 25/9/2022

5000 ரூபாய் லோன் தருகிறேன் என்று சொல்லி ஏமாத்திட்டாங்க! என்று முத்தழகு சீரியல் நடிகை கதறி அழுத வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் விஜய் டிவியும் புதுப்புது வித்தியாசமான கதைகளத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் மதியம் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் முத்தழகு.

இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. எந்த சூழ்நிலையிலும் மனம் தராமல் தைரியமாக போராடும் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.தற்போது சீரியலில் பூமிநாதன், அஞ்சலி- முத்தழகு இருவரையும் திருமணம் செய்து இருக்கிறார். இதில் பூமிநாதன் தன்னுடைய மனைவியாக யாரை ஏற்றுக் கொள்வார்? என்ற திருப்பத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் பேச்சியம்மாள் என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை லட்சுமி வாசுதேவன்.

நடிகை லட்சுமி வாசுதேவன் நடித்த படங்கள்:

இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங் செய்து கொண்டிருந்தார். அதற்குப்பின் பல மொழிகளில் விளம்பர படங்களில் நடித்தார். அதன் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. இவர் முதன் முதலாக அறிந்தும் அறியாமலும் படத்தில் தான் பிரகாஷ்ராஜ் ஜோடியாக நடித்திருந்தார். அடுத்தடுத்து இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் வந்தது. இவர் பெரும்பாலும் குணச்சித்திர வேதங்களில் தான் நடித்திருந்தார். இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

லட்சுமி வாசுதேவன் சிந்திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்திருக்கிறார். பின் சினிமாவில் வரவேற்பு கொடுத்தவுடன் இவர் சீரியல் பக்கம் சென்று விட்டார். சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் என்ற சீரியல் மூலம் தான் இவர் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் இவருக்கு மக்கள் மத்தியில் பெரிய அடையாளத்தை கொடுத்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான். தற்போது இவர் முத்தழகு சீரியலில் பேச்சியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார்.

லட்சுமி பதிவிட்ட வீடியோ:

அது மட்டும் இல்லாமல் இவர் youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் உடல் நலம், அழகு, ஆரோக்கியம் உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகை லட்சுமி வாசுதேவன் தனக்கு நேர்ந்த சோகத்தை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அதாவது, சமீபத்தில் லட்சுமி மொபைலில் உங்களுக்கு 5000 ரூபாய் லோன் வந்திருக்கிறது என்று மெசேஜ் வந்தது. அதை அவர் ஓபன் செய்து பார்த்திருக்கிறார். உடனே அந்த ஆப் டவுன்லோட் ஆகியிருக்கிறது. அதற்குப்பின் அவரை அறியாமலே அவருடைய மொபைல் ஹேக் ஆகி இருக்கிறது. அவர் சம்பந்தப்பட்ட டீடைல் எல்லாம் திருடி இருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by Lakshmi Vasudevan (@lakshmivasudevanofficial)

வீடியோவில் நடிகை கூறியது:

அது மட்டுமில்லாமல் அந்த ஆப் டவுன்லோட் ஆகி ஐந்து நாட்களிலேயே நீங்கள் 5000 ரூபாய் பணம் கட்ட வேண்டும் இல்லையென்றால் உங்களுடைய புகைப்படத்தை எல்லாம் வெளிவிட்டு விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள். இது தொடர்பாக லட்சுமியும் சைபர் கிரைமில் புகார் கொடுத்திருக்கிறார். இருந்தாலும், இவருடைய புகைப்படத்தை மார்ஃபிங் செய்து கேவலமாக சித்தரித்து லட்சுமியின் whatsapp குரூப்பிலும் சோசியல் மீடியாவிலும் பதிவிட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக தான் லட்சுமி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, தயவு செய்து யாரும் இந்த மாதிரி லோன் தருகிறார்கள் என்று மெசேஜ் வந்தால் ஆப்பை டவுன்லோடு செய்யாதீர்கள். உங்களை அறியாமல் உங்களுடைய மொபைல் ஹேக் செய்யப்படும். என்னுடைய தப்பான புகைப்படத்தை என்னுடைய பெற்றோர், நண்பர்கள் எல்லாம் அனுப்பி இருக்கிறார்கள் என்று அழுது கொண்டே கூறி கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full