நடிப்பை தாண்டி புது பிசினஸ் தொடங்கிய சீரியல் நடிகை மகாலக்ஷ்மி - என்ன தெரியுமா?

By subhashini · 28/1/2026

சீரியல் நடிகை மகாலட்சுமி புதிதாக தொடங்கியிருக்கும் தொழில் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மகாலட்சுமி . இவர் நடிகை மட்டும் இல்லாமல் பல நிகழ்ச்சிகளில் ஆங்கர் ஆகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் படிப்பு முடிந்ததும் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக மீடியாவிற்குள் நுழைந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் அரசி என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதற்கு பின் மகாலட்சுமி 13 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்து வருகிறார். இவர் சன், ஜீ தமிழ் என பல சேனலில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே இவர் அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சச்சின் என்ற மகனும் இருக்கிறார். பின் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக அனில்- மகாலட்சுமி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

மகாலட்சுமி குறித்த தகவல்:

பின் தன்னுடைய மகனுடன் மகாலட்சுமி தனியாக தான் வாழ்ந்து வந்தார். அப்படியே தொடர்ந்து மகாலட்சுமி சீரியலில் நடித்தும் வருகிறார். பின் மகாலட்சுமி அவர்கள் தயாரிப்பாளர் ரவீந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது இரண்டு பேருக்குமே இரண்டாம் திருமணம் தான். சில மாதங்கள் இவர்களுடைய திருமணம் குறித்த செய்தி தான் சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காகவே சென்றிருந்தது. இருந்தாலும், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருவருமே சேர்ந்து எடுத்துக் கொண்டு புகைப்படங்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார்கள்.

மகாலக்ஷ்மி திருமணம்:

அதன் பின் கடந்த ஆண்டு ரவீந்திரனை மோசடி வழக்கில் போலீசார் கைது செய்திருந்தார்கள். அவர் பல போராட்டங்களுக்குப் பிறகு தான் ஜாமினில் இருந்து வெளியே வந்தார். அதற்குப் பிறகு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார். தற்போது அவர் மீண்டும் தன் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது மகாலட்சுமி சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் போட்டோ சூட் நடத்தி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

View this post on Instagram

A post shared by Mahalakshmi Shankar (@mahalakshmi_actress_official)

மகாலக்ஷ்மி பிசினஸ்:

இப்படி இருக்கும் நிலையில் மகாலட்சுமி புதியதாக தொழில் ஒன்றை தொடங்கியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கிராண்ட்மா மேஜிக் என்ற பெயரில் ஊறுகாய் வியாபாரம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அந்த வீடியோக்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்து
இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் மகாலட்சுமிக்கு வாழ்த்துகளை சொல்லி வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full