பாவம் கணேசன் சீரியல் நடிகைக்கு எளிமையாக நடந்த வளைகாப்பு - குவியும் வாழ்த்துக்கள்

By subhashini · 23/8/2024

பாவம் கணேஷ் தொடரின் நடிகைக்கு வளைகாப்பு நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பல்வேறு திருப்பங்களுடன் சென்றிருந்த தொடர் தான் பாவம் கணேசன். இந்த கதை ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை நன்றாக தான் சென்று இருந்தது. இந்த சீரியலில் kpy புகழ் நவீன் நாயகனாக அறிமுகமாகி இருந்தார். இந்த தொடரில் கதாநாயகியாக நேகா கவுடா நடித்து இருந்தார்.

இந்த தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார் நேகா. இவர் பெங்களூரை சேர்ந்தவர். இவருடைய அப்பா கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், நேகா அவர்கள் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட சீரியல் மூலம் தான் அறிமுகமானார்.

நேகாவின் சின்னத்திரைப்பயணம்:

அதற்கு பிறகு இவர் சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு தொடரில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். இதற்கிடையில் இவர் 2018 ஆம் ஆண்டு சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் முழுக்க முழுக்க காதல் திருமணம். இவர்களுடைய காதல் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தொடங்கியது. பின் ஸ்கூல், காலேஜ் என்று தொடங்கிய இவர்கள் காதல் இறுதியில் கல்யாணத்தில் முடிந்தது.

நேகா குறித்த தகவல்:

திருமணத்திற்கு பிறகும் கணவரின் சம்மதத்துடன் நேகா நடிப்பைத் தொடங்கினார். அதுமட்டுமில்லாமல் கன்னட கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி ரியாலிட்டி ஷோவில் இருவரும் பங்கு பெற்று இருந்தார்கள். பின் நடிகை நேகா கன்னட பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்திருந்தது.

நேகா கர்ப்பம்:

அதற்கு பின் இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. மேலும், இவர் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். பின் இவர் தன் கணவருடன் சேர்ந்து ப்ரக்னன்சி போட்டோ ஷூட் நடத்தி இருந்தார். இந்த நிலையில் நடிகை நேகாவிற்க்கு வளைகாப்பு நடந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வளைகாப்பு நிகழ்வு :

அதாவது, நேகாவிற்கு வளைகாப்பு நிகழ்வு பெங்களூரில் எளிமையாக நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்விற்கு நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் நேகாவின் நெருங்கிய தோழிகளான சண்முகப்பிரியா, ஸ்ரீதேவி அசோக் கலந்து கொண்டு வாழ்த்தி இருந்தார்கள். தற்போது நேகாவின் வளைகாப்பு புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full