திருமணம் ஆகி 2 வருடங்கள் கழித்து குட் நியூஸ் சொன்ன ப்ரீத்தி குமார்- கிஷோர், குவியும் வாழ்த்துக்கள்

By subhashini · 18/1/2025

ப்ரீத்தி குமார்- கிஷோர் சொல்லி இருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2009ல் வெளியான “பசங்க” திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதோடு நடிகர் விமலும் இந்த படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகினார். இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் அதிகமாக குழந்தைகளுக்கு இடையில் நடக்கும் சண்டைகள் கருத்து வேறுபாடுகள் போன்றவை தான் காட்டப்படும்.

இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் கிஷோர். இதனை தொடர்ந்து இவர் கோலி சோடா, வஜ்ரம், 6 அத்தியாயம், சகா, ஹவுஸ் ஓனர், உறுதிகொள் போன்ற பல தமிழ் படங்களிலும், துரோகி,புள்ளி ஆகிய தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். குழந்தை பருவத்தில் வெளிவந்த இவரின் படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தது. ஆனால், இவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை.

கிஷோர்- ப்ரீத்தி காதல் :

தற்போதும் இவர் சினிமாவில் முயற்சி செய்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் கிஷோர் அவர்கள் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை காதலி வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஆபீஸ்” என்ற சீரியலின் மூலம் சின்னதிரைக்கு அறிமுகமானவர் ப்ரீத்தி குமார் . பின் இவர் `லட்சிமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல, கோபுரங்கள் சாய்வதில்லை என சீரியல்களில் நடித்திருந்தார். அதன் பின் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

நடிகை ப்ரீத்தி குமார்-கிஷோர் திருமணம்:

பின் கிஷோர்- ப்ரீத்தி குமார் இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய காதலை இணையத்தில் தெரிவித்து இருந்தார்கள். உடனே, இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் திருமணத்தில் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். அதோடு கிஷோரை விட ப்ரீத்தி 4 வயது பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பீர்த்தி-கிஷோர் சர்ச்சை:

இது குறித்து சோசியல் மீடியாவிலும் சர்ச்சை எழுந்து இருந்தது. இருந்தாலுமே இருவரும் அதை பற்றி கண்டுகொள்ளாமல் தங்களுடைய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் பீர்த்தி-கிஷோர் , எங்களுடைய வயதைப் பற்றி நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்ததில்லை. நாங்கள் மட்டும் இல்லை எங்களுடைய குடும்பத்தினருக்கும் அதை பற்றி கவலை இல்லை என்று கூறியிருந்தார்கள்.

View this post on Instagram

A post shared by Preethi Kumar (@preethikumar_official)

பீர்த்தி-கிஷோர் சொன்ன குட் நியூஸ்:

திருமணத்திற்கு பிறகு பிரீத்தி குமார் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புனிதா என்ற தொடரில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் ப்ரீத்தி குமார்- கிஷோர் சொல்லிருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது திருமணம் ஆகி 2 வருடங்கள் கழித்து ப்ரீத்தி குமார்- கிஷோர் இருவருமே கூடிய விரைவில் பெற்றோர்கள் ஆக இருக்கும் தகவலை கூறியிருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளிவந்ததை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full