லட்சக்கணக்கில் நகை, பணம், கார் இழந்த தொழில் அதிபர் - சீரியல் நடிகை ராணியை வலைவீசி தேடும் போலீஸ்
சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ராணி. இவர் பல வருடங்களாக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் ராணி, இவருடைய கணவர் பாலாஜி, பாலாஜியின் நண்பர் புருஷோத்தமன் மீது கரூர் ஓட்டல் அதிபர் தினேஷ் ராஜ் அளித்திருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் ராஜ்.
இவர் கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டார் ஹோட்டலை சொந்தமாக நடத்தி வருகிறார். நடிகை ராணியின் கணவர் பாலாஜி கடந்த மே மாதம் தினேஷ் ராஜை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது ஒரு நட்சத்திர ஓட்டலை ஒரு வருடத்திற்கு தன்னுடைய நண்பர் புருஷோத்தமன் பெயரில் குத்தகைக்கு எடுக்க இருப்பதாக பாலாஜி கூறியிருக்கிறார். இதற்காக 10 லட்சம் குத்தகை தொகை வழங்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதனால் ஒரு வருடத்திற்கு ஹோட்டலை குத்தகைக்கு வழங்கும் பத்திரமும் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பேசியபடி பாலாஜி 10 லட்சம் குத்தகை பணத்தை தராமல் காலதாமதம் செய்திருக்கிறார்.
ராணி குறித்த தகவல்:
பின் தினேஷ் ராஜ் அந்த ஹோட்டலை தர மறுத்திருக்கிறார். இதை அடுத்து தினேஷ் ராஜ் வைத்திருந்த 80 லட்சம் மதிப்புள்ள காஸ்ட்லி காரை தன்னுடைய மனைவியிடம் காண்பித்து விட்டு வருவதாக சொல்லி பாலாஜி அந்த காரை எடுத்துச் சென்றுள்ளார். காரை எடுத்துச் சென்ற பாலாஜி திரும்பி வரவே இல்லை. செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போதும் போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த தினேஷ் ராஜ், நேரில் சென்று பாலாஜியை சந்தித்து இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=qdGdG-MGKEw
ராணி மீது புகார்:
அப்போது பாலாஜி, ராணி, புருஷோத்தமன் மூன்று பேருமே சேர்ந்து ரொம்ப மோசமாக பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ் ராஜ், கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் 80 லட்சம் மதிப்புள்ள உயர் ரக காரை பாலாஜி ஏமாற்றி
ஏமாற்றியதோடு 10 லட்சம் மதிப்புள்ள வைரத்தோடு, 50 சவர நகை ஆகிய அனைத்துமே அனைத்துமே காரில் இருந்தது. மொத்தமாக என்னை ஏமாற்றி விட்டார்கள்.
சீரியல் நடிகை ராணியிடம் லட்சக்கணக்கில் நகை பணம் தொழில் அதிபர் இழந்தது ஏன்..? சீரியலை விட இந்த கதை வேற மாதிரி..#serialactress | #Businessman | #scam | #polimernews pic.twitter.com/0RuAON0S6N
— Polimer News (@polimernews) December 29, 2025
போலீஸ் விசாரணை:
அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறார். இதை அடுத்து போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்திருக்கிறது. பின் பாலாஜியின் நண்பர் புருஷோத்தமனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், ராணியும் அவருடைய கணவர் பாலாஜியும் தலைமுறைவாகிருக்கிறார்கள். உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்று போலீசார் தேடி வருகிறார்கள். விசாரணைக்கு ராணியை நேரில் ஆஜராகம்படி சம்மன் அனுப்பி இருக்கிறார்கள்