மெஷினில் கை சிக்கி மருத்துவமனையில் அட்மிட் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை- என்ன ஆச்சு தெரியுமா?

By subhashini · 19/11/2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சாய் காயத்ரிக்கு ஏற்பட்டிருக்கும் விபத்து குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சாய் காயத்ரி. இவர் விஜய் டிவியில் மட்டுமில்லாமல் பிற சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். அந்த வகையில் இவர் விஜய் டிவியில் பிரபலமான ஈரமான ரோஜாவே என்ற சீரியலின் முதல் பாகத்தில் நடித்து இருந்தார்.

இந்த சீரியலின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை அடுத்து கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சீசன் சீரியலில் ஐஸ்வர்யா ரோலில் நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், இடையிலே இந்த தொடரில் இருந்து சாய் காயத்ரி விலகி இருந்தார்.

சாய் காயத்ரி குறித்த தகவல்:

அதற்குப் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீ நான் காதல்’ என்ற சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் ‘இஸ் பியார் கோ கியா நாம் தூண்’ என்ற ஹிந்தி சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த சீரியலில் ஹீரோவாக பிரேம் ஜாக்கோவும், ஹீரோயின் ஆக வர்ஷினி சுரேஷ் நடிக்கிறார்கள். சாய் காயத்ரி இந்த சீரியலில் ஹீரோயினுக்கு அக்காவாக நடித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் சுமார் ஒரு வருடத்தை கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வாய்ப்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

சீரியலில் விலக காரணம்:

பின் திடீரென இந்த சீரியலில் இருந்து நடிகை சாய் காயத்ரி விலகி இருப்பதாக அறிவித்து இருந்தார்.
இது குறித்து அவர், தவிர்க்க முடியாத உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக நான் ‘நீ நான் காதல்’ சீரியலில் இருந்து விலகுகிறேன். என்னை மன்னிக்க வேண்டும். இதுவரை நீங்கள் எனக்கு கொடுத்த வரவேற்பை இனியும் அணு மற்றும் ஆகாஷ் கதாபாத்திரத்திற்கு கொடுக்க வேண்டும். விரைவில் உங்களை மீண்டும் சின்னத்திரை மூலம் சந்திப்பேன் நன்றி என்று கூறி இருந்தார்.

பிசினஸில் கலக்கும் சாய்:

இது ஒரு பக்கம் இருக்க, நடிகை சாய் காயத்ரி தனக்கென ஒரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். மேலும, இவர் ‘சாய் சீக்ரெட்ஸ்’ என்கிற காஸ்மெட்டிக் நிறுவனத்தை தொடங்கி சிறிய தொழிலதிபராக விளங்கி வருகிறார். அந்த நிறுவனத்தின் மூலம் இவர் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஹேர் ஆயில், ஃபேஸ் மாஸ்க், நலங்கு மாவு, ஹேர் பேக் உள்ளிட்ட பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவருடைய பொருட்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

View this post on Instagram

A post shared by GAYATRI R (@saai_gayatri)

சாய் காயத்ரிக்கு ஏற்பட்ட விபத்து:

இப்படி இருக்கும் நிலையில் நடிகை சாய் காயத்ரிக்கு ஏற்பட்ட விபத்து குறித்த தகவல் தான் வைரலாகி வருகிறது. அதாவது, காஸ்மெடிக் நிறுவனத்தின் மெஷினில் அரைத்துக் கொண்டிருக்கும் போது நடிகை சாய் காயத்ரி கை அதில் தவறுதலாக சிக்கி இருக்கிறது. இதனால் அவருக்கு பெரிய அடி ஏற்பட்டிருக்கிறது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்திருக்கிறார்கள். தற்போது கையில் பெரிய கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை சாய் காயத்ரி தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full