எளிமையாக நடந்த மெட்டிஒலி சீரியல் நடிகை மருமகள் வளைகாப்பு - குவியும் வாழ்த்துக்கள்
சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சந்தியா. இவர் திருவண்ணாமலை அருகில் உள்ள கலசபாக்கம் ஊரை சேர்ந்தவர். இவர் பிகாம், பிஎல், எம்எல் படிப்பை முடித்திருக்கிறார். இவர் பட்டிமன்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதற்கு பிறகு இவர் சில நிகழ்ச்சிகளை தொகுப்பாளராகவும் தொகுத்து வழங்கியிருந்தார். குறிப்பாக, ஆதித்யா டிவியில் ஒளிபரப்பான காலேஜ் டாட் காம் நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்கியிருந்தார்.
அதற்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த கண்மணி என்ற டிவியில் மூலம் தான் இவர் நடிக்க தொடங்கினார். அதற்குப் பிறகு இவர் சத்யா, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், நம்ம வீட்டு பொண்ணு போன்ற பல தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் என்ற தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இவர் பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கிடையில் சந்தியா அவர்கள் முரளி கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சந்தியா நடித்த சீரியல்:
இவர்களுடைய திருமணம் முழுக்க முழுக்க அரேஞ்ச் மேனேஜர் தான். முரளி கிருஷ்ணன் வேற யாரும் இல்லை மெட்டிஒலி சாந்தியின் மகன் தான். ஏற்கனவே சக்திவேல் தொடரில் மெட்டி ஒலி சாந்தியின் மருமகள் கதாபாத்திரத்தில் தான் சந்தியா நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது நிஜமாகவே இவர் சாந்தியின் மருமகளாகி இருக்கிறார். சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.
சந்தியா குறித்த தகவல்:
திருமணத்திற்கு பிறகும் சந்தியா, சீரியல் நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் தான் இந்த சீரியலினுடைய முதல் பாகத்தை முடித்துவிட்டு தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இது அடுத்து சமீபத்தில் தான் சக்திவேல் 2 சீரியலில் இருந்து சந்தியா விலகி இருந்தார். இவருக்கு பதில் தற்போது சக்திவேல் 2 சீரியலில் நடிகை சஹானா நடித்து வருகிறார். சொந்த காரணத்தினால் தான் சீரியலை விட்டு சந்தியா விலகுவதாக கூறியிருந்தார்.
https://youtube.com/shorts/Olbn0g3Ee9g?si=TbVghtldikrQR8wn
சந்தியா வளைகாப்பு:
இப்படி இருக்கும் நிலையில் நடிகை சந்தியா கர்ப்பமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சந்தியாவிற்கு எளிமையாக வீட்டிலேயே வளைகாப்பு நடத்திருக்கிறார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும், இதற்காக தான் நீங்கள் சீரியலை விட்டு நின்றீர்களா? வாழ்த்துக்கள் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.