செம்பருத்தி நடிகை ஷபானா நடிக்கும் புது சீரியல், அவரே வெளியிட்ட பதிவு- குவியும் வாழ்த்துக்கள்

By subhashini · 27/6/2024

சீரியல் நடிகை ஷபானா நடிக்கும் புது சீரியல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருப்பவர் ஷபானா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த 'செம்பருத்தி' சீரியல் மூலம் மக்கள் முடிவடைந்த அறியப்பட்டவர் ஷபானா. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர்.

மேலும், இந்த சீரியலில் ஹீரோவாக ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ், நாயகியாக பார்வதி கதாபாத்திரத்தில் ஷபானா நடித்து இருந்தார். இவர் மும்பையை சேர்ந்தவர். இவர் தமிழ், மலையாள சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் தான் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார். இதனிடையே ஷபானா– ஆர்யன் இருவரும் காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆர்யன் – ஷபானா காதல் :

இவர்கள் திருமணத்திற்கு ஷபானா-ஆர்யன் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. காரணம், ஆர்யன் இந்து, ஷபானா முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். இதனால் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் தான் இவர்கள் அவசர அவசரமாக நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும், இவர்களது திருமணம் இந்துமத முறைப்படி நடந்தது. திருமணத்திற்கு பிறகும் இருவரும் தங்களின் கேரியலில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஆர்யன்-ஷபானா நடிக்கும் சீரியல்கள்:

அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'மீனாட்சி பொண்ணுங்'க என்ற சீரியலில் ஹீரோவாக ஆர்யன் நடித்து வருகிறார். அதே போல் ஷபானா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'மிஸ்டர் மனைவி' என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்த இருந்தார். இந்த சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை நன்றாக சென்று கொண்டிருக்கின்றது. பின் திடீர் என்று இந்த சீரியலில் இருந்து நடிகை ஷபானா விலகி இருந்தார். இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். பின் இது குறித்து ஷபானா, மிஸ்டர் மனைவி சீரியலில் அஞ்சலியாக நடித்தது சந்தோஷமாக இருக்கிறது.

சீரியலில் விலக காரணம்:

அந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த சீரியலில் இருந்து விலகுவது கஷ்டமாகத்தான் இருக்கிறது. நன்றாக யோசித்த பிறகு தான் இந்த முடிவை எடுத்தேன். புது ப்ராஜெக்ட்டில், நல்ல கதாபாத்திரத்துடன் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு ஷபானா பதில் கொடுத்திருந்தார். அப்போது உங்களுடைய அடுத்த ப்ராஜெக்ட் என்ன என்று ரசிகர் ஒருவர் கேட்டிருக்கிறார்.

ஷபானா புது ப்ராஜெக்ட்:

அதற்கு ஷபானா, கூடிய விரைவில் என்று பதிலளித்திருக்கிறார். இதன் மூலம் இவர் புதிய தொடரில் கமிட் ஆகி இருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஆனால், அந்த சீரியல் குறித்த விவரம் தெரியவில்லை. ரசிகர்கள் பலரும் ஷபானாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் எந்த சேனல்? எந்த சீரியல்? என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம், ஷபானா, விக்ரம் பிரபு நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full