நாம் உருவாக்கிய அழகான நினைவுகளுடன் உலகத்தில் வாழ்கிறேன், மிஸ் செய்கிறேன் - நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா உருக்கம்
மூன்றாம் ஆண்டு திருமண நாளில் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா போட்டு இருக்கும் உருக்கமான பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சுருதி சண்முகப்பிரியா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த தொடர் தான் நாதஸ்வரம்.
இந்த தொடரை திருமுருகன் எழுதி இயக்கி நடித்தும் இருந்தார். இந்த தொடரில் பலர் நடித்து இருந்தார்கள். குடும்ப உறவுகளின் கதையை மையமாகக் கொண்ட இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுருதி சண்முகப்பிரியா. இவர் நாதஸ்வரம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருந்தார். அந்த தொடருக்குப் பின்னர் இவர் பொன்னூஞ்சல், கல்யாண பரிசு, வாணி ராணி, பொம்முகுட்டி அம்மாவுக்கு போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
ஸ்ருதி சண்முகப்ரியா குறித்த தகவல்:
அதேபோல இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் கூட நடித்திருந்தார். பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த பாரதிகண்ணம்மா தொடரில் நடித்து இருந்தார். அதற்கு பின் இவர் மீடியாவில் இருந்து விலகி இருந்தார். இருந்தாலும், இவர் எப்போதும் சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். இதற்கிடையில் இவர் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்தார்.
அரவிந்த் -சுருதி சண்முகப்ரியா:
இவர்களுடைய திருமணம் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது. திருமண வரவேற்பில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள். திருமணம் ஆகி இருவரும் சந்தோசமாக வாழ்ந்தார்கள். ஆனால், யார் கண் பட்டுதோ தெரியவில்லை திடீரென்று அரவிந்த்க்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். இதனால் சுருதி மனம் உடைந்து போய் விட்டார். மேலும், தன் கணவர் இறப்பிற்கு பின் மனம் தேறிய சுருதி சன் தொலைக்காட்சியில் சஞ்சீவ் மற்றும் சுருதி நடிக்கும் லட்சுமி தொடரில் தான் நடிக்கிறார்.
ஸ்ருதி சண்முகப்பிரியா பதிவு:
இதை பார்த்து ரசிகர்கள் அவருடைய மன உறுதியை பாராட்டி வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். தற்போது இவர் மூன்று முடிச்சு சீரியலில் முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய மூன்றாம் ஆண்டு திருமண நாளில் தன்னுடைய மறைந்த கணவர் அரவிந்த் சேகரை பற்றி உருக்கமாக ஸ்ருதி சண்முகப்பிரியா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இனிய மூன்றாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் அரவிந்த் சேகர். உன்னுடைய அரவணைப்பை நான் மிஸ் செய்கிறேன். உன்னுடைய பூக்களும் வாழ்த்துக்களும் இன்று எனக்கு இல்லை.
திருமண நாள் பதிவு:
நீ என் அருகில் இல்லாததை உணர்கிறேன். ஆனால், நாம் ஒன்றாக உருவாக்கிய அழகான நினைவுகளுடன் நம்முடைய சொந்த உலகத்தில் வாழ்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இதே நாளில் நம்முடைய எதிர்காலம் எவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்று நிறைய கனவுகளையும் கற்பனைகளையும் கொண்டிருந்தோம். நம்முடைய கனவுகளையும், ஆசைகளையும் மெல்ல மெல்ல நிறைவேற்றி நீ எனக்கு கற்றுத் தந்த தைரியமான பாடங்கள், அனுபவங்கள் மற்றும் ஞாபகத்துடன் ஒவ்வொரு அடியையும் முன்னோக்கி எடுத்து வைக்கிறேன். எப்போதும் உன்னுடைய பெருமை மிக்க மனைவியாக இருப்பேன். என்றென்றும் நான் உன்னுடைய ஸ்ருதி, அரவிந்தின் ஸ்ருதி என்று கூறியிருக்கிறார்.