திருமணத்தில் எனக்கு விருப்பமே இல்லை, அம்மா கட்டாயப்படுத்தினாங்க- முதன் முறையாக மனம் திறந்த ஸ்ரீஜா செந்தில்

By Rajkumar · 28/7/2024

திருமணம் செய்து கொள்வதில் எனக்கு விருப்பமே இல்லை என்று முதல் முதலாக மனம் திறந்து நடிகை ஸ்ரீஜா செந்தில் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் செந்தில்- ஸ்ரீஜா. இந்த சீரியலின் மூலம் தான் இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=RRQoSUv6xlg

இந்த நிலையில் சமீபத்தில் ஸ்ரீஜா- செந்தில் இருவருமே நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேட்டி கொடுத்திருந்தார்கள். அதில் ஸ்ரீஜா, நான் செந்திலை திருமணம் செய்வதற்கு முன்பு என்னுடைய பெற்றோர்கள் வீட்டில் வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்திருந்தார்கள். அவருடன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. மாப்பிள்ளை வீட்டில் எல்லோருமே என்னை பெண் பார்க்க வந்த போது எனக்கு விருப்பமே கிடையாது.

செந்தில்- ஸ்ரீஜா பேட்டி:

அக்கா, அம்மா எல்லோருமே கட்டாயப்படுத்தி இருந்தார்கள். அதனால் தான் திருமணத்திற்கு ஓகே சொன்னேன். இந்த விஷயத்தை நான் என்னுடைய தோழியிடம் சொன்னேன். அவர் இவரிடம் சொன்னார். பின் செந்தில், என்னிடம் கல்யாணம் என்று சொல்கிறீர்கள், ஏன் சந்தோசமே இல்லை? என்று கேட்டார். உடனே நான், எனக்கு விருப்பமே இல்லை என்று சொன்னேன். அதற்கு அவர், கல்யாணம் பிடிக்கவில்லை என்றால் வீட்டில் சொல்லுங்கள். தைரியமாக பேசுங்கள் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்திருந்தார்.

திருமணம் குறித்து சொன்னது:

அதற்குப் பின் நானும் வீட்டில் எனக்கு கல்யாணம் பிடிக்கவில்லை என்று தைரியமாக சொன்னேன். அவர்களும் என்னுடைய விருப்பத்தை ஏற்றுக் கொண்டு அந்த திருமணத்தை நிறுத்தி விட்டார்கள். அதற்கு பிறகுதான் செந்திலுடன் நான் பேச ஆரம்பித்தேன். அப்போது தான் இவரை திருமணம் செய்தால் என்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று என் மனதில் தோன்றியது. உடனே நான் என்னுடைய காதலை அவரிடம் சொன்னேன். அவரும் ஓகே என்று சொன்னார். பின் நாங்கள் இரு வீட்டிலுமே பேசி திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியிருக்கிறார்.

செந்தில்- ஸ்ரீஜா குறித்த தகவல்:

மேலும், செந்தில் அவர்கள் ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜே வாக தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். பின் இவர் நடிகர் ஆனார். இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதற்கு பின் இவர் தவமாய் தவமிருந்து, செங்காத்து பூமியிலே, கண்பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், சினிமாவில் இவருக்கு மக்கள் மத்தியில் ரீச் கிடைக்காததால் மீண்டும் சின்னத் திரைக்கு வந்து விட்டார்.

செந்தில்- ஸ்ரீஜா குடும்பம்:

பின் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகியும் செந்தில் – ஸ்ரீஜா தம்பதி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்தார்கள். கடந்த ஆண்டு தான் ஸ்ரீஜா கர்ப்பமாகி இருந்தார். பின் ஸ்ரீஜாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது செந்தில் அவர்கள் ஜீ தமிழில் ஓளிபரப்பாகி வரும் 'அண்ணா' சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full