சத்தம் இல்லாமல் முடிந்த யாரடி நீ மோகினி சீரியல் நடிகை ஸ்ரீநிதியின் நிச்சயதார்த்தம் - வைரலாகும் வீடியோ

By subhashini · 18/5/2026

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் வேற யாரும் இல்லைங்க, அஜித்தின் வலிமை படம் ரிலீஸ் போது விமர்சனம் பேசி அஜித் ரசிகர்களால் தொல்லைகளை சந்தித்து இருந்த சின்னத்திரை சீரியல் நடிகை. இதனால் இவருடைய பெயர் சோசியல் மீடியாவில் பயங்கரமாக அடிபட்டது. அதோடு நடிகர் சிம்புவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசை இருப்பதாக இவர் கூறி இருந்த கருத்தும் பயங்கர சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இவர் சின்னத்திரை சீரியல் ரசிகர்களுக்கு பரிச்சயமான முகம் என்றே சொல்லலாம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த 7C என்ற சீரியலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருந்தார் ஸ்ரீநிதி. ஆனால், இவர் இதற்கு முன்பே குழந்தை பருவத்தில் பல சீரியல்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இருந்த யாரடி நீ மோகினி சீரியலில் ஸ்ரீநிதி நடித்திருந்தார்.

ஸ்ரீநிதி குறித்த தகவல்:

இந்த சீரியல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இதனால் இந்த சீரியல் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருந்தது. இதனை தொடர்ந்து இவர் சில சீரியல்களில் நடித்து வந்தார். அதன் பின் இவர் சோசியல் மீடியாவில் பேசிய கருத்துக்கள் சர்ச்சையில் சிக்கி இருந்தது. இவருடைய தோழிகளே, ஸ்ரீநிதி மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார்கள்.

ஸ்ரீநிதி சர்ச்சை:

அதற்குப்பின் ஸ்ரீநிதி சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் நடிக்க வந்தார். தற்போது அவர் சீரியலில் நடித்துக் கொண்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது ஸ்ரீநிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது ஸ்ரீநிதிக்கு எளிமையாக வீட்டிலேயே நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by YASH WEDDINGS (@weddingzbyyash)

ஸ்ரீநிதியின் நிச்சயதார்த்தம் :

மாப்பிள்ளை குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. ஸ்ரீநிதியின் நிச்சயதார்த்த விழாவில் கயல் சீரியல் நடிகை சைத்ரா, நட்சத்திரா, கேப்ரில்லா உட்பட சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு திருமண தேதி குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. பலருமே ஸ்ரீநிதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்

behindtalkies AMP · Quick view
View full