என்னை நிம்மதியா விடுடா, எதாவது பண்ணிக்குவேன்னு பயமா இருக்கு - கண்ணீருடன் சீரியல் நடிகை ஸ்வேதா வீடியோ

By subhashini · 16/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியல் எல்லாம் மக்கள் மத்தியில் பேர் ஆதரவை பெற்று வருகிறது. இந்த சீரியலில் தமிழ்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் ஸ்வேதா. இவர் இந்த சீரியலில் தொடங்கும் போது தான் ஆதி என்பவரை காதலிப்பதாக சொன்னார். ஆனால், அவர் யார்? என்பதை சோசியல் மீடியாவில் அறிவிக்கவே இல்லை. பின் சமீபத்தில் தான் ஸ்வேதாவின் காதலர் ஆதி என்று ஒரு நபர் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், எனக்கும் ஸ்வேதாவுக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு பதிவு திருமணம் நடந்து விட்டது. ஆனால், அதை வெளியில் சொல்லாமல் சீக்ரெட்டாக வைத்திருக்கிறோம் என்றெல்லாம் கூறியிருந்தார்.

அதன் பின் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளிவந்தது. இதை அடுத்து ஆதி தொடர்ந்து சுவேதா குறித்து பேட்டி கொடுத்துக்கொண்டே வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் ஸ்வேதா கண்ணீருடன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், எனக்கு அவ்ளோ கோவம், அவ்வளவு வலிக்குது. பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கிறது. நான் ஆதி என்பவரை லவ் பண்ணேன். ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணேன். எல்லோரையும் கூப்பிட்டு வச்சு எல்லாம் திருமணம் செய்யவில்லை. நான் காதலிக்கும் விஷயம் என்னுடைய பெற்றோர்களுக்கு தெரிந்து விட்டது. அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் நான் வீட்டை விட்டு வந்து விட்டேன்.

ஸ்வேதா-ஆதி விவகாரம்:

அவன், திருமணத்திற்கு முன்பே பிசினஸ் செய்கிறேன். அதனால் நஷ்டம் அடைந்து விட்டது என்று சொல்லி அடிக்கடி என்னிடம் பணம், நகைகளை எல்லாம் கேட்பான். நானும் பைத்தியக்காரி மாதிரி அவன் சொன்னதை எல்லாம் செய்தேன். இதெல்லாம் நான் காலேஜ் படிக்கும் போதே நடந்தது. ஒரு கட்டத்தில் என் வீட்டில் உண்மை தெரிந்து விட்டது. வீட்டில் எல்லோருமே அவன் வேணாம், சரியில்லை என்று சொன்னார்கள். ஆனால், நான் தான் அவன் மீது இருந்த காதலில் வீட்டை எதிர்த்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டேன். சென்னை வந்து ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டேன். தெரு தெருவாக அலைந்து சாப்பாடு இல்லாமல் இருந்தோம். ஏற்கனவே பத்தாவது இருந்தே நான் மாடலிங், வெப்சீரிஸ் எல்லாம் நடித்துக் கொண்டிருந்தேன்.

View this post on Instagram

A post shared by Swetha (@swetha.officiall)

ஸ்வேதா வீடியோ:

அதன் மூலம் தான் எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு உள்ளது. சின்னமருமகள் சீரியலில் நான் இரவும் பகலமாக கஷ்டப்பட்டு நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் தான் வேலைக்கு போய் சம்பாதித்தேன். அவன் எந்த வேலைக்குமே போகவில்லை. நான் சம்பாதித்த பணத்தை அவனுக்கு கொடுத்தேன். அவன் தன் மீது கேஸ் இருக்கிறது என்று சொல்லி நிறைய செலவு செய்தேன். நிறைய கடன் வாங்கினேன். அவன் மீது இருந்த நம்பிக்கையால் தான் நான் நிறையவே செய்தேன். ஆனால், அவனைப் பற்றிய உண்மை தெரிந்த பிறகு நான் அவனை விட்டு வந்து விட்டேன். என்னை சமாதானப்படுத்த கூட அவன் பேசவில்லை.

View this post on Instagram

A post shared by Swetha (@swetha.officiall)

சர்ச்சைகளுக்கு பதிலடி:

எல்லோரையும் ஏமாத்துற நீ என்ன தைரியத்தில் சுத்துற ஆதி. ஒரு நாள் நீ மாட்டுவன்னு உனக்கு தெரியாதா? என்ன மனுஷன் நீ? உன் மேல தப்பு வச்சு நீ எந்த தைரியத்துல இன்டர்வியூ கொடுத்துட்டு இருக்க. இப்படி ஒரு கேவலமான ஜென்மம். எனக்கு தேவையில்லை. என்ன பண்ண முடியுமோ பண்ணு, நான் பார்த்துக்கிறேன். என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை ஏதாவது பண்ணிப்பேன். எனக்கு பயமா இருக்கு. மனரீதியாக நான் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு ஏதாவது ஆனால் அதற்கு ஆதி மட்டும்தான் காரணமாக இருப்பான் என்று இந்த வீடியோவில் நான் சொல்லிக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full