குழந்தை பிறந்த உடனே புது பிசினஸ் தொடங்கி இருக்கும் மகாநதி சீரியல் நடிகை வைஷாலி
சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் வைஷாலி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ராஜா ராணி சீரியலில் ஹீரோவின் தங்கையாக நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த சீரியலுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பின் இந்த சீரியலில் இருந்து வைஷாலி விலகிவிட்டார். அதற்குப்பின் இவர் விஜய் டிவியில் முத்தழகு சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். முத்தழகு சீரியலின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து இவர் சன் டிவியில் ஆனந்த ராகம் போன்ற பிற சேனல்களில் நடித்து வந்தார்.
வைஷாலி நடிக்கும் சீரியல்கள்:
அதன் பின் இவர் பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வரும் மகாநதி சீரியலில் வெண்ணிலா ரோலில் வில்லியாக நடித்து இருந்தார். அக்கா, தங்கைகளின் பாச மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் தான் மகாநதி. இந்த சீரியலின் மூலம் வெண்ணிலாவாக மிரட்டி இருந்தார் வைஷாலி. சமீபத்தில் தான் சீரியலில் இவர் ட்ராக் முடிந்தது.
வைஷாலி குறித்த தகவல்:
அதோடு இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கெட்டி மேளம் சீரியலில் நடித்து வருகிறார். இதற்கிடையில் வைஷாலி அவர்கள் தன்னுடைய நீண்ட நாள் நண்பர் சத்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் எந்த ஒரு மகிழ்ச்சியான செய்தியும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் இவர் தன் கணவருக்கு பரிசாக கொடுத்த புதிய கார், டான்ஸ் ஸ்டுடியோ போன்ற விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.
வைஷாலி புது பிசினஸ்:
மேலும், கடந்த ஆண்டு தான் வைஷாலிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இப்படி இருக்கும் நிலையில் வைஷாலி தொடங்கி இருக்கும் புது பிசினஸ் குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, வைசாலி தன்னுடைய கணவருடன் சேர்ந்து Creamencreamy என்ற ஐஸ் கடையை திறந்து இருக்கிறார்கள். கடையின் திறப்பு விழாவில் குடும்பத்துடன் சேர்ந்து பூஜை எல்லாம் போட்டு இருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படம் வீடியோக்களை வைசாலி இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலருமே வைசாலிக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.