உருவ கேலி, மோசமான கமெண்ட்கள் - கடுப்பில் சீரியல் நடிகை வைஷ்ணவி வருத்தம், என்ன ஆச்சு?

By subhashini · 23/4/2025

தன்னை பற்றிய உருவகேலி தொடர்பாக விஜய் டிவி சீரியல் நடிகை போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தான். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை. தற்போது சீரியலில் சிந்தாமணி-மீனா செய்யும் பித்தலாட்ட வேலைகள் குறித்த ட்ராக் தான் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும், இந்த சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு டிக் டாக், instagram ரீல்ஸ் என்று பதிவிட்டு வந்தார். அதன் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் கிடைத்தது. அதற்குப் பின் இவர் நிறைய குறும்படங்களில் நடித்திருந்தார். அதன் மூலம் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சிறக்கடிக்க ஆசை என்ற சீரியலில் கதாநாயகனாக வெற்றி வசந்த் கலக்கி வருகிறார்.

வெற்றி வசந்த் குறித்த தகவல்:

இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இதற்கிடையில் நடிகர் வெற்றி வசந்த் தன்னுடைய காதலி வைஷ்ணவியை அறிமுகம் செய்து வைத்திருந்தார். இவரும் சீரியல் நடிகை தான். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘பொன்னி’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தான் இவர்கள் இவர்கள் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கு முன் நடக்கும் சங்கீத், மெஹந்தி ஹல்டி போன்ற திருமண கொண்டாட்டங்களும் நடந்திருந்தது.

வெற்றி வசந்த்-வைஷ்ணவி திருமணம்:

அதன் பின் நவம்பர் 28ஆம் தேதி, நடிகர் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி சுந்தர் திருமணம் சிறப்பாக சென்னையில் நடந்து முடிந்திருந்தது. இந்த திருமணத்தில் இவர்களின் குடும்பத்தினர் மற்றும் சீரியல் பிரபலங்களும் பங்கேற்று வாழ்த்து மழையை பொழிந்து இருந்தார்கள். திருமணத்திற்கு பிறகு வைஷ்ணவி எமோஷனலாக instaவில் தன் கணவர் பற்றி பதிவு ஒன்று போட்டு இருந்தார். மேலும், திருமணத்திற்கு பின் இருவருமே தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

வைஷ்ணவி-வெற்றிவசந்த் சர்ச்சை:

அதேபோல் திருமணத்திற்கு பிறகும் இருவரும் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் வைஷ்ணவிக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அப்போது வெற்றிவசந்த் தன்னுடைய மனைவிக்காக கூடவே இருந்து கசாயம் வைத்து கொடுத்து ரொம்ப கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை வைஷ்ணவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, என்னுடைய அம்மா போன்று பார்த்து கொள்ளும் கணவர் கிடைத்திருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார்.

வைஷ்ணவி பதிலடி:

இதை பார்த்த சிலர், வெற்றி வசந்த், வைஷ்ணவி இருவரையும் உருவ கேலி செய்து ரொம்ப மோசமாக கமெண்ட் போட்டு திட்டி இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக வைஷ்ணவி தன்னுடைய பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் அவர், ஒருவர் சந்தோஷமாக இருப்பதை கண்டு வாழ்த்த வேண்டும் என்று அவசியம் கிடையாது. ஆனால், சிலர் மற்றவர்களுடைய மனம் கஷ்டப்படும் அளவிற்கு பேசி வருகிறார்கள். பிரபலங்கள் என்றால் அவர்களுக்கும் சந்தோஷம் துக்கங்கள் இருக்கும். அவர்கள் அதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வது தவறான விஷயம் கிடையாது. இது போன்ற கமெண்ட் செய்பவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full