சீரியல் ஜோடி அன்வர்-சமீராவிற்கு 2வது குழந்தை பிறந்தாச்சு, அவர்களே வெளியிட்ட அழகிய புகைப்படம்

By subhashini · 6/7/2025

அன்வர்-சமீரா ஜோடிக்கு மீண்டும் குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சமீரா. இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இவர் தெலுங்கு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் நடித்த சீரியலில் அன்வரின் அம்மாவும் இருந்தார். அப்போது இருந்தே அன்வரின் அம்மாவுக்கும், சமீராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பின் குடும்ப நண்பர்களாக இருந்தவர்கள் சில காலங்களுக்குப் பிறகு குடும்ப உறவினர்கள் ஆகவே மாறிவிட்டார்கள். அதனை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பகல் நிலவு என்ற தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானார் சமீரா. இந்த சீரியல் மூலம் இவருக்கு என்ற ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் அன்வர்.

சமீரா-அன்வர் குறித்த தகவல்:

இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தார்கள். மேலும், இந்த சீரியலுக்கு பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான றெக்க கட்டி பறக்குது மனசு என்ற தொடரில் சமீரா நடித்தார். அதோடு இந்த சீரியலை அன்வர்-சமீரா இருவரும் சேர்ந்து தயாரித்தார்கள். இந்த இரு சீரியல்களுக்கு பிறகு அன்வர்– சமீரா ஹைதராபாத்தில் உள்ள சமீரா வீட்டில் பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் முறைப்படி மிக எளிமையாக இவர்களுடைய திருமணம் நடந்தது இருந்தது.

சமீரா-அன்வர் ஜோடி:

திருமணத்திற்கு பின் இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார்கள். பின் சில வாரங்களில் இவர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அதற்கு பின் சமீரா கர்ப்பமாக இருக்கும் தகவலை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்கள். பின் தான் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோ என அனைத்தையும் சமீரா பதிவிட்டு வந்தார்.

சமீரா குழந்தை:

அதன் பின் சில ஆண்டுகளுக்கு முன் சமீராவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அதன் பின் சமீரா- அன்வர் இருவரும் தங்கள் குழந்தையுடன் ஒதுக்கும் நேரத்தை வீடியோவாகவும், புகைப்படங்களாவும் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்கள். சமீரா குழந்தை பிறந்த பிறகு எந்த சீரியலிலும் கமிட்டாகவில்லை. குடும்பம், குழந்தை என்று பிசியாக இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Sameera Sherief (@sameerasherief)

சமீரா மீண்டும் குழந்தை:

இப்படி இருக்கும் நிலையில் சமீரா-அன்வர் தம்பதிக்கு மீண்டும் குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சில மாதங்களுக்கு முன்பு சமீரா இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார். தற்போது இவர்களுக்கு மீண்டும் அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த சந்தோஷமான செய்தியை சமீரா-அன்வர் ஜோடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full