என்னை மீண்டும் ஒன்றாக சேர்த்தீர்கள்- திருமணத்திற்கு பின் தன் கணவருக்கு நன்றி சொல்லி வைஷ்ணவி உருக்கம்
தன்னுடைய கணவருக்கு நன்றி சொல்லி எமோஷனலாக சீரியல் நடிகை வைஷ்ணவி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தான். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை. தற்போது சீரியலில் ரோகினி-மனோஜ் செய்யும் பித்தலாட்ட வேலைகள் குறித்த ட்ராக் தான் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும், இந்த சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு டிக் டாக், instagram ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வந்தார். அதன் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் கிடைத்தது. அதற்குப் பின் இவர் நிறைய குறும்படங்களில் நடித்திருந்தார். அதன் மூலம் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சிறக்கடிக்க ஆசை என்ற சீரியலில் கதாநாயகனாக வெற்றி வசந்த் கலக்கி வருகிறார்.
வெற்றி வசந்த் குறித்த தகவல்:
இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இதற்கிடையில் நடிகர் வெற்றி வசந்த் தன்னுடைய காதலி வைஷ்ணவியை அறிமுகம் செய்து வைத்திருந்தார். இவரும் சீரியல் நடிகை தான். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘பொன்னி’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவர்கள் இவர்கள் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கு முன் நடக்கும் சங்கீத், மெஹந்தி ஹல்டி போன்ற திருமண கொண்டாட்டங்களும் நடந்திருந்தது. அதன் பின் நவம்பர் 28ஆம் தேதி, நடிகர் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி சுந்தர் திருமணம் சிறப்பாக சென்னையில் நடந்து முடிந்திருந்தது.
வெற்றி வசந்த்-வைஷ்ணவி காதல்:
இந்த திருமணத்தில் இவர்களின் குடும்பத்தினர் மற்றும் சீரியல் பிரபலங்களும் பங்கேற்று வாழ்த்து மழையை பொழிந்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிகை வைஷ்ணவி instaவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், என்னை ரொம்ப நேசித்ததற்கு நன்றி. என்னுடைய முகத்தில் இந்த அளவுக்கு மகிழ்ச்சியை நான் பார்த்ததே இல்லை. அந்த மகிழ்ச்சியை கொடுத்ததற்கும் நன்றி. என்னுடைய காதல் நாளுக்கு நாள் வலுவடைந்து சென்று கொண்டிருக்கின்றது. என்னை சிரிக்க வைக்கிறீர்கள். உங்களுடன் இருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=sl52Mo5RHGI
வெற்றி வசந்த் திருமணம்:
இந்த சந்தோஷத்தை வேற யாராலுமே எனக்கு கொடுக்க முடியாது. இந்த அளவுக்கு என்னை பற்றி நான் யாரிடமும் இவ்வளவு வெளிப்படையாக பகிர்ந்து கொண்டதில்லை. என்னை முழுவதும் தெரிந்து கொண்ட நபர் நீங்கள் மட்டும்தான். நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் வருவதற்கு முன்பு நான் என் வாழ்க்கையில் நிறைய அனுபவித்து இருக்கிறேன். இருந்தும் நீங்கள் வந்து தரையில் உடைந்து கிடந்த துண்டுகளை எடுத்து என்னை மீண்டும் ஒன்றாக சேர்த்து விட்டீர்கள்.
வைஷ்ணவி பதிவு:
மீண்டும் ஒருவரை எப்படி நம்புவது என்று எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள். என்னை எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் நீங்கள் தான் கற்றுக் கொடுத்தீர்கள். நீங்கள் அற்புதமான மனிதராக இருந்ததற்கு மட்டுமல்ல இந்த பயணத்தில் சிறந்த நபராக என்னை மாற்றியதற்கும் உங்களுக்கு நன்றி. ஐ லவ் யூ ஆல்வேஸ் என்று பதிவிட்டிருக்கிறார். இதற்கு வெற்றிவசந்த், ஐ லவ் யூ மா என்று பதில் கொடுத்திருக்கிறார். தற்போது இவர்களின் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.