'பசங்க கல்யாணத்த கூட பாக்காம போய்ட்டீங்களே' - தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுத சேஷுவின் மனைவி
சமீபத்தில் இறந்த சேஷு செய்த உதவிகள் குறித்து அவரின் பகுதி மக்கள் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக திகழ் பவர் லொள்ளு சபா சேசு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் சந்தானம், ரோபோ சங்கர் போன்ற பல பிரபலங்கள் தமிழ் சினிமா உலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சேசு. இவர் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தான் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். அதற்கு பின் இவர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் மாறன், சந்தானம், ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்ட லொள்ளு சபா நிகழ்ச்சியின் முதல் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது.
நடிகர் சேசு திரைப்பயணம்:
அதன் பின் இவர் வீராப்பு, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், திரௌபதி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வடிவேலு நடிப்பில் வெளியாகி இருந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் இவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பூமர் அங்கிள், ராயர் பரம்பரை போன்ற சில படங்களிலும்நடித்திருந்தார். மேலும், இவர் வெள்ளி திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.
https://www.youtube.com/watch?v=OWTsig9rvIo
மருத்துவமனையில் அனுமதி :
இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இவர் பூசாரி கதாபாத்திரத்தில் பரதநாட்டியம் ஆடி அசத்தி இருப்பார். படத்தில் அவருடைய காமெடியும், பரதநாட்டியமும் வைரலாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கே இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சேசு மரணம்:
பின் இவர் விரைவில் குணமடைந்து வருவார் என்று கூறப்பட்டது. கடந்த சில தினங்களாகவே இவர் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் தான் சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி நடிகர் சேசு காலமாகி விட்டார். இவருடைய மறைவு இணையதளத்தில் வெளியானதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். தற்போது இவருக்கு 60 வயது ஆகிறது.
https://www.youtube.com/watch?v=-KpneXpcwSw
கதறி அழுத சேஷுவின் மனைவி :
சேஷுவின் உடலுக்கு பல்வேறு பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். இப்படி ஒரு நிலையில் சேஷுவின் மனைவி அவரது உடலை பார்த்து தலையில் அடித்துக்கொண்டு பசங்க கல்யாணம் கூட பாக்காம விட்டு போய்ட்டிங்களே என்று தலையில் அடித்திக்கொண்டு அழுதது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது இதனை தொடர்ந்து சேஷுவின் உடல் அவரது சமுதாய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.