சத்தமில்லாமல் திடீர் திருமணம் முடித்த செவ்வந்தி சீரியல் நடிகை - மாப்பிள்ளை யார் தெரியுமா ?

By subhashini · 23/9/2023

திடீரென்று செவ்வந்தி சீரியல் நடிகை திருமணம் செய்திருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக தொலைக்காட்சித் தொடர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புது புது கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.

அதிலும் சன் டிவியில் 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பான தொடர் தான் செவ்வந்தி. இதில் கதாநாயகியாக சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் நடிக்கிறார். இவரை பற்றி பலரும் அறிந்ததே. இவரை அடுத்து 90 களில் தொடர்களிலும், படங்களிலும் கலக்கிய நடிகர் ராகவ் தான் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தார். மேலும், இவர் சினிமா துறையில் நடிகர் மட்டுமல்லாமல் மியூசிக் கம்போஸ்ஸர், தொகுப்பாளர், இயக்குனர் என பல முகங்களைக் கொண்டவர்.

செவ்வந்தி சீரியல் :

நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் செவ்வந்தி சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார். ஆனால், திடீரென்று அவர் சீரியலில் இருந்து விலக நேர்ந்தது. அதன் காரணமாக அவர் இறந்தது போல கதையை மாற்றி விட்டார்கள். இவரை அடுத்து இந்த சீரியலில் இருந்து பல நடிகர்கள் விலகி விட்டார்கள். இருந்தாலும், இந்த சீரியல் தற்போது வரை நன்றாக தான் சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் செவ்வந்தி சீரியல் நடிகை திடீரென்று திருமணம் செய்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சன் டிவியில் ஒளிபரப்பான அபியும் நானும் என்ற சீரியலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் ரம்யா கெளடா. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது பின் சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிந்தது.

பார்கவ்-ரம்யா கெளடா திருமணம்:

அதற்குப் பின்னர் ரம்யா கெளடா செவ்வந்தி சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின் திடீரென்று இவர் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். இவர் வெளியேறியது குறித்த காரணம் என்ன என்று தெரியவில்லை. இந்த நிலையில் இவர் பார்கவ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். பார்கவ்-ரம்யா கெளடா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்திருக்கிறார்கள்.

குவியும் வாழ்த்துக்கள்:

தற்போது இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து இருக்கிறார்கள். மேலும், இவர்களுடைய திருமண புகைப்படங்கள் தான் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் பலரும் பார்கவ்-ரம்யா கெளடா ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full