வாணி ராணி, செவ்வந்தி சீரியல் பிரபலத்தின் மனைவி எடுத்த விபரீத முடிவு - சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல்.

By Arun · 24/5/2023

நடிகை ராதிகா நடித்த வாணி ராணி சீரியலின் இயக்குனர் ஓ என் ரத்தினத்தின் மனைவி தற்கொலை செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அந்த வகையில் சன் டிவி சீரியலில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் ஓ என் ரத்தினம். இவர் இயக்கிய அழகு, வாணி ராணி, செவ்வந்தி , பிரியமான தோழி, பாண்டவர் இல்லம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கியிருக்கிறார்.

இவருடைய சொந்த ஊர் பொள்ளாச்சி. இவருடைய மனைவி பிரியா. இவருடைய மனைவியும் இதே ஊர்தான். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி பத்தாண்டுகள் ஆகிறது. தற்போது பள்ளி விடுமுறை என்பதால் தங்களுடைய பிள்ளைகளை ரத்தினம் அவர்கள் அவர்களுடைய தாத்தா வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்.

இயக்குனர் மனைவி ப்ரியா இறப்பு:

ரத்தினமும் அவருடைய மனைவியும் மட்டுமே வீட்டில் இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையில் சிறிய சண்டை ஏற்பட்டு இருக்கிறது. பின் மறுநாள் தன்னுடைய மகன்களை அழைத்து வர ரத்தினம் பேருந்து நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் தான் பிரியா வீட்டில் தற்கொலை செய்து இருக்கிறார். பின் வீடு திரும்பிய ரத்தினம் அவர்கள் உண்மை அறிந்து பிரியாவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.

பிரியா இறப்பு குறித்து சொன்னது:

ஆனால், அவர் இறந்து விட்டதாக அறிவித்திருக்கிறார்கள். ரத்தினம் மனைவி பிரியா இறந்திருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இது குறித்து ரத்தினத்தின் நண்பர்களிடம் விசாரித்த போது, இரண்டு பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணத்திற்கு நிறைய எதிர்ப்புகள் இருந்தது. பிரியாவின் வீட்டில் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவே இல்லை.

இரங்கலை தெரிவிக்கும் பிரபலங்கள்:

ஆனால், பிரியா ரத்தினத்தை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அடம் பிடித்து தான் திருமணம் செய்து கொண்டார். அப்படி கல்யாணம் செய்து கொண்ட பிரியா இப்படி செய்து கொள்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. கணவன் மனைவிக்கு இடையே நடந்த சின்ன சண்டைக்கா? இவர் இப்படி உயிரை மாய்த்துக் கொண்டார் என்று நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது என்று கூறுகிறார்கள். மேலும், பிரியாவின் மறைவிற்கு சின்னத்திரை சீரியல் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full