'என் பல நாள் கனவு நனவானது' - டிடிஎப் வாசன் காதலி ஷாலின் ஜோயா சொன்ன குட் நியூஸ், குவியும் வாழ்த்துக்கள்
குக் வித் கோமாளி பிரபலம் ஜோயா ஷாலின் போட்டிருக்கும் பதிவிற்கு ரசிகர்கள் குவித்து வரும் வாழ்த்துக்கள் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஐந்து சீசன்களை கடந்து ‘குக் வித் கோமாளி ’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.
அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். மேலும், நான்கு சீசன்களிலும் இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள். நடந்து முடிந்த ஐந்தாவது சீசனில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட், நிறுவனம் Media Masons 10, நிகழ்ச்சியின் இயக்குனர் ஆகியோர் விலகி இருந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அதன் பின் இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருந்தார்.
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி:
பல பிரச்சனைகளுக்கு நடுவில் இந்த ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிந்தது. இந்த சீசனில் பழைய கோமாளிகளுடன், புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, kpy வினோத் ஆகியோர் இணைந்து இருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியின் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் ஷாலின் ஜோயா. இந்த நிகழ்ச்சியில் இவர் தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.
ஷாலின் ஜோயா குறித்த தகவல்:
மேலும், இந்த நிகழ்ச்சியில் இவர் மலையாளம் கலந்து பேசும் தமிழ் ரசிகர்களை கவர்ந்து இருந்தது. இதனாலே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் மீடியாவில் நுழைந்தார். அதிலும் இவர் நடித்த Kudumbayogam என்ற மலையாள சீரியல் மிக பிரபலம். அதற்கு முன் இவர் 2004ம் ஆண்டு மிழிதுறக்கும் போல் என்ற மலையாள சீரியலில் நடித்து மீடியாவில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து தான் இவர் பல மலையாள சீரியல்களில் நடித்து இருந்தார்.
ஷாலின் ஜோயா திரைப்பயணம்:
அதற்குப்பின் இவர் மலையாளத்தில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி இருந்தார். அதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த வகையில் இவர் சில தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது ‘கண்ணகி’ படம் தான்.
இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது. இதை அடுத்து இவர் சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.
ஷாலின் ஜோயா பதிவு:
இது ஒரு பக்கம் இருக்க, ஷாலின் ஜோயா எப்போதுமே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். இவர் தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படம், வீடியோக்களை எல்லாம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் பதிவு தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்ட்டு வருகிறது. அதாவது, எல்லோருக்கும் இருக்கும் கனவைப்போல ஜோயாவிற்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று ஆசை இருந்ததாம். தற்போது அதை நிறைவேறி இருப்பதாக புகைப்படத்துடன் ஷாலின் ஜோயா பதிவு போட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.