எலிமினேஷனுக்கு பின் புலம்பல் பதிவுகளை இன்ஸ்டா ஸ்டோரியில் Train விட்டு வரும் ஜோயா
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் ஜோயா பதிவிட்டு வரும் பதிவுகள் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.
மேலும், இந்த நான்கு சீசன்களிலும் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்த நிறுவனம் Media Masons 10, நிகழ்ச்சியின் இயக்குனர் ஆகியோர்கள் விலகி இருந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அதன் பின் இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார்.
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி:
பல பிரச்சனைகளுக்கு நடுவில் இந்த குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த சீசனில் பழைய கோமாளிகளுடன் , புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, kpy வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர். அதே போல இந்த சீசனில் போட்டியாளர்களாக ஷாலின் ஜோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ரிவியூவர் இர்பான், நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றார்கள்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
மேலும், நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல புது கான்செப்ட்கள் வழங்கி வருகிறார்கள். கோமாளிகளும் வழக்கம் போல் குக்குகளையும் நடுவர்களையும் கலாய்த்துக் கொண்டு தான் வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சரண்யா பொன்வண்ணன் கலந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை இருவருமே தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
வெளியேறிய பிரபலம்:
மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து குறைவான மதிப்பெண்களை பெற்று ஸ்ரீகாந்த் தேவா, வசந்த் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் சுற்று நடைபெறுகிறது. இதில் ஜோயா, இர்ஃபான், திவ்யா ஆகியோரில் யார் வெளியேற போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் ஜோயா தான் இந்த வரம் குறைவான மதிப்பெண்களை பெற்று வெளியேறி இருக்கிறார்.
புலம்பும் ரசிகர்கள் :
இந்த நிகழ்ச்சியில் இவர் சமையல் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு இந்த நிகழ்ச்சியில் இவர் மலையாளம் கலந்து பேசும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. இவர் வெளியேறிய பின்னர் இவரது ரசிகர்கள் பலர் Unfair எலிமினேஷன், இனி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்கப்போவதே இல்லை என்று புலம்பி வருகின்றனர். அதை எல்லாம் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் Train போல பகிர்ந்து வருகிறார் ஜோயா