பாலிவுட் சென்றாலும் அட்லீயை விடாமல் துரத்தும் Copy சர்ச்சை - கேலிக்கு உள்ளான ஜவான் ட்ரைலர்

By Siva · 10/7/2023

மீண்டும் நெட்டிசன்கள் இடம் வசமாக அட்லி சிக்கியிருக்கும் சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இந்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

https://www.youtube.com/watch?v=smP4vBPNuYQ

பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். இதில் விஜய்யை வைத்து முதலாக தெறி என்ற படத்தை இயக்கி இருந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. பின் அட்லீ மெர்சல் படத்தை இயக்கி இருந்தார். இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதி விஜய் ஆக ஆனதே மெர்சல் படத்திற்குப் பிறகு தான். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

விஜய்-அட்லீ படம்:

இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயை வைத்து பிகில் என்ற படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் அவர்கள் ராயப்பன், மைக்கேல் என்று அப்பா - மகன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தில் மைக்கேல் கதாபாத்திரத்தை விட ராயப்பன் கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டு இருந்தது. இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

ஷாருக்கான்-அட்லீ படம்:

பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். அதோடு அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. அதில், ஷாருக்கானின் முகம் கூட தெரியாத அளவுக்கு முகம் முழுக்கப் பேண்டேஜ் சுற்றிக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் இதேபோல் இருக்கும் ஹாலிவுட் படத்தை கண்டுபிடித்துகலாய்த்து வந்தனர்.

அதாவது 1990 ஆம் ஆண்டு Liam Neeson ஹீரோவாக நடித்த Darkman படத்தின் காப்பி தான் ஜவான் திரைப்படம் என்று கூறிவருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நெட்டிசன்கள் சொல்லி வருவது போல் இரண்டுமே ஒரே மாதிரி பேண்டேஜ் சுற்றிக்கொண்டு இருக்கின்றது. இதனால் அட்லீ வழக்கம்போல் காப்பி அடிக்கப்பட்ட படத்தை தான் இயக்குகிறார் என்ற சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இதனை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி கிண்டல் செய்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பிரிவியூ வீடியோ ஒன்று இன்று வெளியாகி இருந்தது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் அதே வேளையில் இந்த வீடியோவில் வரும் சில காட்சிகளை அந்நியன், பாகுபலி, வலிமை என்று பல்வேறு படங்களில் வரும் காட்சியை போல இருக்கிறது என்று கேலி செய்து வருகின்றனர். இதுவரை அட்லீ இயக்கிய தமிழ் படங்கள் காபி சர்ச்சையில் சிக்கிய நிலையில் பாலிவுட் சென்றாலும் காபி சர்ச்சை அட்லீயை விடாமல் துரத்துகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full