சிறையில் இருக்கும் தன் மகனுக்கு ஷாருக்கான் மணியாடர் அனுப்பியுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட் வட்டாரத்தில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ஷாருக்கான். இவரின் மகன் ஆர்யான் சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளார். இதை அறிந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் கடந்த 3ஆம் தேதி கப்பலில் சாதாரண பயணிகள் போல் பயணம் செய்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் உட்பட 8 பேர் கைது செய்யபட்டுள்ளது.

மேலும், அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதோடு ஆர்யான் ஜாமீன் கோரி போடப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

Advertisement

ஆர்யான் தொடர்ந்து போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் கொண்டவர் என்றும் இது குறித்து இவர் சில ஆண்டுகளாகவே போதை பொருள் பயன்படுத்துவதாக நீதிமன்றத்தில் சொல்லி அதற்குரிய ஆதாரங்களையும் ஒருவர் கொடுத்து உள்ளார். இதனையடுத்து ஜாமின் மனு மீதான உத்தரவை 20ஆம் தேதி ஒதுக்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யான் கான் அங்குள்ள கேன்டீன்களில் செலவழிப்பதற்கு அவன் குடும்பத்தினர் 4500 ரூபாய் மணியார்டர் அனுப்பி உள்ளனர். அதோடு இந்தத் தொகைக்கு மேல் சிறையில் அனுமதி கிடையாது. அதனால் தான் ஷாருக்கான் இவ்வளவு தொகையை அனுப்பி உள்ளார் என்று சிறை கண்காணிப்பாளர் நிதின் வேச்சல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பல சர்ச்சைகளும் கேள்விகளும் எழுந்தவண்ணம் உள்ளன.

Advertisement
Advertisement