ஹிந்தி திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ஷாருக்கான். 2000-யில் வெளி வந்த தமிழ் திரைப்படம் ‘ஹேராம்’. இதில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடித்திருந்தார். அவரே தயாரித்து, இயக்கியிருந்த இந்த படத்தில் ஷாருக்கான் மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதுவும் கமல் ஹாசனுக்கு நண்பராக வலம் வந்திருந்தார் ஷாருக்கான்.

இந்த படத்தில் ஷாருக்கானின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ஷாருக்கானிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது கொரோனா நிவாரண பணிகளுக்காக பல முன்னணி நடிகர்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் மும்பையில் இருக்கும் அவரது 4 மாடி கொண்ட அலுவலகத்தை, ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்ட மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார். அந்த அலுவலகம் எப்படி அவர்களுக்கு பயன்படும் வகையில் மாற்றப்பட்டிருக்கிறது என்பதை ஒரு வீடியோ பதிவாக வெளியிடப்பட்டிருக்கிறது. அவ்வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Advertisement

கடைசியாக ஷாருக்கான் நடித்து ஹிந்தி திரையுலகில் வெளி வந்த திரைப்படம் ‘ஜீரோ’. இந்த படத்தினை இயக்குநர் ஆனந்த். எல். ராய் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஷாருக்கான் நடிக்கவிருக்கும் புதிய படத்தை தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அட்லி இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இதற்கான ஸ்க்ரிப்ட் அமைக்கும் பணி மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறதாம். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்த பிறகு, அப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement